தமிழகத்திற்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல்!

Tamil Nadu on High Alert: தமிழகத்தில் ஊடுருவியிருக்கும் 6 பயங்கரவாதிகளும் கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
தமிழகத்திற்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல்!

High Alert in Tamil Nadu: தமிழகத்தில் ஊடுருவியிருக்கும் பயங்கரவாதிகள் கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல்.


தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகள் (LeT Terrorist in Tamil Nadu) கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் (LeT Terrorist in Tamil Nadu) ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையைப் போன்று தமிழகத்திலும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக டிஜிபி திரிபாதிக்கு மத்திய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. 

உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் டிஜிபி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இதனால், நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். விமான நிலையம், ரயில் நிலையங்கள், மற்றும் பேருந்து நிலையங்களில் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். 

இதனிடையே, தமிழகத்தில் ஊடுருவியிருக்கும் 6 பயங்கரவாதிகளும் கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கோவை முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். பொது இடங்கள் மற்றும் பதற்றமான இடங்களில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதே போல் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் கோவையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

தொடர்ந்து, பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்களை கோவை போலீசார் வெளியிட்டதாக 3 பேரின் புகைப்படங்கள் இணையதளங்களில் வேகமாக பரவியது. ஆனால், பயங்கரவாதிகள் என்று சந்தேகிப்போரின் புகைப்படங்கள் எதுவும் வெளியிடவில்லை என டி.ஜி.பி.திரிபாதி விளக்கமளித்துள்ளார். 


 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................