This Article is From Jul 19, 2019

ஒன்றரை மாதம் தாமதமாக குற்றாலத்தில் சீசன் தொடங்கியது! சுற்றுலா பயணிகள் உற்சாகம்!!

அருவியில் தண்ணீர் வீழ்ச்சி சீராக இருப்பதால் குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

ஒன்றரை மாதம் தாமதமாக குற்றாலத்தில் சீசன் தொடங்கியது! சுற்றுலா பயணிகள் உற்சாகம்!!

குளிக்கும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கும் குற்றால சீசன் ஒன்றரை மாத தாதத்திற்கு பின்னர் தற்போது தொடங்கியுள்ளது.  

நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவில் குளிப்பதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருவார்கள். வழக்கமாக ஆண்டுதோறும் ஜூனில் சீசன் தொடங்கும். இருப்பினும் தாமதம் ஏற்பட்டதால் மக்களும், சீசன் வியாபாரிகளும் ஏமாற்றம் அடைந்தனர்.

இதற்கு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியதுதான் முக்கிய காரணம். தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

குறிப்பாக ஐந்தருவி மற்றும் மெய்ன் அருவியில் பயணிகள் நிற்க முடியாத அளவுக்கு தண்ணீர் கொட்டியது. இதனால் எவரும் அங்கு அனுமதிக்கப்படாமல் இருந்தனர்.

இன்று நீர்வரத்து சீரானதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் மிகுந்த உற்சாகத்துடன் குளித்து வருகின்றனர்.

.