நிலச்சரிவிலிருந்து தன் உரிமையாளர்களை காப்பாற்றிய பூனைகள்...!

பூனைகளான சிம்பா மற்றும் மோஸ் கொடுத்த சத்தத்தினால் தன் மனைவி எழுந்ததாக கூறி கிளாடியோ பியானா உள்ளூர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்

நிலச்சரிவிலிருந்து தன் உரிமையாளர்களை காப்பாற்றிய பூனைகள்...!

மொத்த வீடும் இடிந்துள்ள நிலையில் குறைந்த பட்சம் சிம்பாவும் மோஸும் உயிர் பிழைத்தனர். (Representative Image)

ஒரு இத்தாலிய தம்பதியினர் தாங்கள் வளர்க்கும் பூனைகள் கொடுத்த எச்சரிக்கையினால் நிலச்சரிவிலிருந்து தப்பியுள்ளனர். 

கடும் புயல்கள் வடக்கு இத்தாலியை தாக்கியது, லிகுரியா பிராந்தியத்தில் கடுமையான மழை பெய்ததால் திங்கள் கிழமை இரவு காம்போ லிகுரேவில் உள்ள வீட்டில் பியானாவும் அவரது மனைவி சப்ரினா பெல்லெக்ரினியும் தூங்கச் சென்றனர். புயல், ஆறுகள் கரைகளை உடைத்து  நிலச்சரிவுகளை ஏற்படுத்தின. 

ஒரு டாக்ஸி ஓட்டுநர் இறந்ததால் மக்கள் பலரும் தங்கள் வீடுகளிலே இருந்துள்ளனர்.  இந்நிலையில், பூனைகளான சிம்பா மற்றும் மோஸ் கொடுத்த சத்தத்தினால் தன் மனைவி எழுந்ததாக கூறி கிளாடியோ பியானா  உள்ளூர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

பூனைகள் கூரையிலிருந்து விழுந்த பிளாஸ்டர் துண்டுடன்  விளையாடின பின்னர் சுவர்களிலும் விரிசல் விழுவதைக் கண்டோம் என்று தெரிவித்தார்.

நிலச்சரிவினால் வீட்டின் ஆஸ்திவாரங்கள் பலவீனமாகியது.  பூனைகளின் சத்தத்தைக் கேட்டு தம்பதியினர் இருவரும் எழுந்துள்ளனர். வெளியில் வந்ததும் மண் சரிவில் சிக்கிக் கொண்டனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். 

மொத்த வீடும் இடிந்துள்ள நிலையில் குறைந்த பட்சம் சிம்பாவும் மோஸும் உயிர் பிழைத்தனர். 

Click for more trending news


More News