''குடிமக்கள் சட்டத்தை கொண்டு வந்து, மேற்கு வங்கத்தில் ஊடுருவியவர்களை வெளியேற்றுவோம்''

பாஜகவை மேற்கு வங்க மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். மக்களவை தேர்தலில் எங்களுக்கு இங்கு 18 எம்.பி.க்கள் கிடைத்துள்ளார்கள். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக மேற்கு வங்கத்தில் ஆட்சியமைக்கும் என்று அமித் ஷா பேசினார்.

மேற்கு வங்க அரசியலில் திரிணாமூல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது.

Kolkata:

அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் குடிமக்கள் சட்டத்தை கொண்டு வந்து மேற்கு வங்கத்தில் ஊடுருவியவர்களை வெளியேற்றுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். 

கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது-

மேற்கு வங்கத்தில் வெளிநாட்டவர்கள் ஊடுருவியுள்ளனர். வாக்கு வங்கிக்காக அவர்களை திரிணாமூல் காங்கிரஸ் எதிர்க்காமல் இருக்கிறது. 

குடிமக்கள் சட்டத்தை கொண்டு வந்து மேற்கு வங்கத்தில் இந்திய குடிமக்கள் கணக்கு எடுக்கப்படுவார்கள். பின்னர், அங்கு சட்ட விரோதமாக வந்தவர்கள் வெளியேற்றப்படுவார்கள். இதனை எந்த விதத்தில் திரிணாமூல் காங்கிரஸ் எதிர்த்தாலும் நாங்கள் அதனை நிறைவேற்றி முடிப்போம். 

Newsbeep

மம்தா பானர்ஜிக்கு நாட்டின் நலனை விட கட்சியின் நலன்தான் முக்கியமாக உள்ளது. எங்களால் அப்படி இருக்க முடியாது. எங்களுக்கு நாட்டின் நலன்தான் முக்கியம். 

பாஜகவை மேற்கு வங்க மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். மக்களவை தேர்தலில் எங்களுக்கு இங்கு 18 எம்.பி.க்கள் கிடைத்துள்ளார்கள். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக மேற்கு வங்கத்தில் ஆட்சியமைக்கும். 

இவ்வாறு அமித் ஷா பேசினார்.