This Article is From Nov 13, 2018

டெல்லி காற்று மாசுபாட்டை குறித்து நீதிபதி அரூண் மிஷ்ரா குற்றச்சாட்டு!

“டெல்லியில் காற்று மாசுபாட்டால் என்னால் காலை நடைப்பயிற்ச்சி கூட செய்யமுடியவில்லை ” என நீதிபதி அரூண் மிஷ்ரா இன்று கூறினார். .

The air quality in Delhi remained severe despite several measures (PTI file)

New Delhi:

புது டெல்லி:நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்றின் தர‌ம் மிக மோசமான நிலையில் உள்ளதால் உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான அருண் மிஷ்ரா, இன்று காலை நடந்த நீதிமன்ற கூட்டத்தில் தனது அதிருப்தியையும் மக்களின் கவலையை குறித்தும் தனது கருத்தை தெரிவித்தார்.

“டெல்லியில் காற்று மாசுபாட்டால் என்னால் காலை நடைப்பயிற்ச்சி கூட செய்யமுடியவில்லை ” என நீதிபதி அரூண் மிஷ்ரா இன்று கூறினார்.

தீபாவளியன்று காற்றின் தரம் மிகவும் மோசமடைந்த நிலையில் பட்டாசுகளும், குறைந்த காற்றின் வேகமும், வானிலை மாற்றங்களுக்கு காரணமாக கருதப்படுகிறது.
அரசு தரப்பு வழக்கறிஞர் துஸ்ஸார் மேத்தா வாதாடிக்கொண்டிருக்கும் போது நீதிபதி அருண் மிஷ்ரா இக்கேள்வியை எழுப்பினார். “டெல்லிக்கு என்னவாகிவிட்டது? இந்தளவு மாசு உள்ளதால் மக்களுக்கு வாழ கடின‌மாக உள்ளதாக” நீதிபதி மிஷ்ரா தெரிவித்தார்.
சுற்றுச்சுழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் (Environment Pollution Control Authority) (EPCA) கடந்த திங்களன்று இனி தேவைப்பட்டால் வணிக உபயேகத்துக்கு பயன்படுத்தப்படும் (CNG) அல்லது அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவை தடை செய்யப்படலாம் என தெரிவித்துள்ளது.
இ.பி.சி.யே தலைவர் புகூர் லால், டெல்லி, ஹரியானா மற்றும் உத்தர பிரதேஷம் மாநிலங்களின் தலைமை செயலாளர்க்கு கடிதம் எழுதியுள்ளார், அதில் “வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டாததால் டீச‌ல் வாகனங்களுக்கும் மற்ற வாகனங்களுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை'' எனக் கூறினார்.

.