This Article is From Apr 07, 2020

கொரோனா அச்சுறுத்தல்: “அதைச் செய்யவில்லை என்றால்…”- இந்தியாவை எச்சரிக்கும் டிரம்ப்!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 3,66,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல்: “அதைச் செய்யவில்லை என்றால்…”- இந்தியாவை எச்சரிக்கும் டிரம்ப்!

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு தடை விதித்து ஒரு வார காலம் கடந்துள்ள நிலையில்...

ஹைலைட்ஸ்

  • அமெரிக்காவில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
  • அமெரிகாகவில் 10,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழப்பு
  • உலகளவில் அமெரிக்காதான் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது
Washington/ New Delhi:

இந்தியா, கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக செயல்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் (hydroxychloroquine,) என்னும் மருந்தை ஏற்றுமதி செய்யவில்லை என்றால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு தடை விதித்து ஒரு வார காலம் கடந்துள்ள நிலையில் டிரம்பின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. மலேரியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் இந்த மருந்தினால் கொரோனா தொற்றை எதிர்கொள்ள முடியுமா என்று வல்லுநர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். 

வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப், “ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, ஏற்றுமதி செய்யாமல் இருக்குமென்றால் நான் ஆச்சரியப்படுவேன். அவர்தான் அது குறித்து என்னிடம் சொல்ல வேண்டும். நான் பிரதமர் மோடியிடம், ஞாயிற்றுக் கிழமை கூட பேசினேன். அப்போது எங்களின் மருந்துகள் வருவதை அனுமதிப்பதற்கு நன்றி தெரிவித்தேன். அதே நேரத்தில் தற்போது மருந்தை ஏற்றுமதி செய்ய முடியாது என்று அவர் சொன்னால் பரவாயில்லை. அதே நேரத்தில், அதற்கு விளைவுகளை சந்திக்க நேரிடும்,” என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் இவ்விவகாரம் குறித்துப் பேசியுள்ளார்.

உலகளவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை உற்பத்தி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது. கடந்த வாரம் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் ஐ.சி.எம்.ஆர், இந்த மருந்தை கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் சுகாதாரத் துறை ஊழியர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்தது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 4000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால், நாட்டிலிருந்து மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

அதேபோல மார்ச் 25 ஆம் தேதி, மத்திய அரசு, ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதித்தது. மிகவும் தேவைப்பாட்டால் மட்டுமே மனிதாபிமான அடிப்படையில் இந்த மருந்து ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது அரசு. 

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 3,66,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் அமெரிக்காதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
.