This Article is From Mar 24, 2020

ரயில் டிக்கெட்டுகளை கேன்சல் செய்யத் தேவையில்லை!! பணம் அக்கவுன்டுக்கு தானாக வந்துவிடும்!

இன்று தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டு, மாவட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பால், மருந்து பொருட்களைத் தவிர்த்து மற்ற கடைகள், வணிக நிறுவனங்கள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

ரயில் டிக்கெட்டுகளை கேன்சல் செய்யத் தேவையில்லை!! பணம் அக்கவுன்டுக்கு தானாக வந்துவிடும்!

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 31-ம்தேதி வரையில் பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு
  • பயணிகள் ரயில் போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
  • ரயில் நிறுத்தத்தால், டிக்கெட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன
New Delhi:

ஆன்லைனில் புக் செய்த ரயில் டிக்கெட்டுகளை பயணிகள் கேன்சல் செய்யத் தேவையில்லை என்றும், கேன்சல் செய்ததற்கான தொகை பயணிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு விடும் என்றும் ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்துள்ளது. 

இதேபோன்று கவுன்ட்டர்களில் ரயில் டிக்கெட்டுகளை எடுத்தவர்கள் ஜூன் 21-ம்தேதிக்கு முன்பாக கவுன்ட்டர்களுக்கு சென்று கேனல் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆன்லைனில் டிக்கெட் புக் செய்திருந்தால் அவர்கள் கேன்சல் செய்யத் தேவையில்லை. ரயில்கள் நிறுத்தப்பட்டதால் டிக்கெட்டுகள் கேன்சல் செய்யப்பட்டு விடும். ஆன்லைனில் புக் செய்தவர்களின் பணம் அவர்களது வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும்.

ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றால் கேன்சல் செய்வதற்கான கட்டணம் எடுத்துக் கொள்ளாமல், டிக்கெட்டுக்கான தொகை திருப்பி வழங்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 31-ம்தேதி வரையில் பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சரக்கு ரயில்கள் வழக்கம் போல இயங்கும். இன்று தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டு, மாவட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பால், மருந்து பொருட்களைத் தவிர்த்து மற்ற கடைகள், வணிக நிறுவனங்கள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 1-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15-ஆக தமிழகத்தில் உயர்ந்துள்ளது. 

.