'135 கோடிப்பேர் வசிக்கும் நாட்டில் 6 லட்சம்பேருக்கு தான் கொரோனா பாதிப்பு' - மத்திய அமைச்சர்

பாதிப்பிலிருந்து மீள்வோர் 60 சதவீதமாக இருக்கிறது. பாதிப்பு இரட்டிப்பாக மாறுவதற்கு 21-22 நாட்களை கொரோனா எடுத்துக் கொள்கிறது. நேற்று மட்டும் நாம் 2.30 லட்சம் பரிசோதனைகளை செய்திருக்கிறோம். 

'135 கோடிப்பேர் வசிக்கும் நாட்டில் 6 லட்சம்பேருக்கு தான் கொரோனா பாதிப்பு' - மத்திய அமைச்சர்

தற்போதும் 13 லட்சம் படுக்கைகள் இருப்பில் உள்ளன. 

ஹைலைட்ஸ்

  • கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வோர் 60 சதவீதமாக இருக்கிறது
  • தொற்று 2 மடங்காக அதிகரிப்பதற்கு 22 நாட்கள் வரை எடுத்துக்கொள்கிறது
  • 91 லட்சம்பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன
New Delhi:

இந்தியாவில் 91 லட்சம்பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை எட்டும் என்றும் மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்திருக்கும் பேட்டியில் கூறியிருப்பதாவது-

நாடு முழுவதும் 91 லட்சம் பேருக்கு நாங்கள் கொரோனா பரிசோதனையை நடத்தி முடித்துள்ளோம். விரைவில் ஒரு கோடி பேருக்கு நடத்தி முடித்து விடுவோம். 

இந்த தகவல்கள் எல்லாம், கொரோனாவுக்கு எதிராக இந்தியா எந்த அளவுக்கு வலிமையுடன் போராடி வருகிறது என்பதைக் காட்டுகிறது. 

கொரோனா பாதிப்பை எண்ணி மக்கள் கவலைப்படவேண்டாம். 135 கோடிப்பேர் வசிக்கும் நாட்டில் 6 லட்சம்பேருக்கு தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 3 லட்சத்து, 60 ஆயிரம் பேர் பாதிப்பிலிருந்து மீண்டு விட்டனர். 

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் குணம் அடையும் தருவாயில் உள்ளனர். உயிரிழப்பை பொருத்தளவிலும் நாம் 2.94 சதவீதத்தில் இருக்கிறோம். இது உலக அளவில் மிகவும் குறைந்ததாகும்.

பாதிப்பிலிருந்து மீள்வோர் 60 சதவீதமாக இருக்கிறது. பாதிப்பு இரட்டிப்பாக மாறுவதற்கு 21-22 நாட்களை கொரோனா எடுத்துக் கொள்கிறது. நேற்று மட்டும் நாம் 2.30 லட்சம் பரிசோதனைகளை செய்திருக்கிறோம். 

முதலில் ஒரேயொரு ஆய்வகத்தை மட்டும் கொரோனா பாதிப்பை கண்டுபிடிக்க செயல்பட்டு வந்தது. தற்போது 1,065 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன.

பாதிப்பு ஏற்பட்ட முதல் நாளில் இருந்து நாம் கொரோனாவை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்தோம். தற்போதும் 13 லட்சம் படுக்கைகள் இருப்பில் உள்ளன. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.