தமிழகத்தில் நான்காவது நாளாக 4,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

இன்று மட்டும் மாநிலம் முழுவதும் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,510 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நான்காவது நாளாக 4,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கையானது 1,11,151 ஆக அதிகரித்துள்ளது
  • சென்னையில் மட்டும் 1,1713 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்
  • இதுவரை 62,778 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,11,151 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் மாநிலம் முழுவதும் 4,150 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,1713 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சென்னையில் தற்போது பாதிப்பு குறைந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 62,778 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று மட்டும் மாநிலம் முழுவதும் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,510 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,860 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,186 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  அதே போல கடந்த 24 மணி நேரத்தில் 34,831 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 13,41,715 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.