புதுச்சேரியில் ஆளுங்கட்சி எம்எல்ஏ ஊரடங்கை மீறியதால் வழக்குப் பதிவு: போலீஸ் அதிரடி!

புதுச்சேரி வருவாய் துறை, போலீஸுக்குத் தகவல் கொடுத்துள்ளது. 

புதுச்சேரியில் ஆளுங்கட்சி எம்எல்ஏ ஊரடங்கை மீறியதால் வழக்குப் பதிவு: போலீஸ் அதிரடி!

ஜான் குமார், ஊரடங்கை மீறி செயல்படுவதாகக் கூறி போடப்படும் இரண்டாவது வழக்கு இது. 

Puducherry:

புதுச்சேரியில் ஆளுங்கட்சி காங்கிரஸ் எம்எல்ஏ-வான ஜான் குமார் மீது, ஊரடங்கை மீறி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஜான் குமார், ஊரடங்கை மீறி செயல்படுவதாகக் கூறி போடப்படும் இரண்டாவது வழக்கு இது. 

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு நெருக்கமானவரான ஜான் குமார், தன் வீட்டுக்கு அருகில் உள்ள நெல்லித்தோப்பு கிராமத்தில், மக்களுக்கு அரிசி விநியோகம் செய்துள்ளார். அவர் இப்படி அரிசி விநியாகம் செய்த காரணத்தால், பொது மக்கள் சுமார் 150 பேர் கூடியுள்ளனர். இதைத் தொடர்ந்து புதுச்சேரி வருவாய் துறை, போலீஸுக்குத் தகவல் கொடுத்துள்ளது. 

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் ஜான் குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. 

சென்ற மாதம் ஜான் குமார், தன் வீட்டுக்கு அருகில், சுமார் 200 பேருக்கு காய்கறிகளை விநியோகம் செய்து கொண்டிருந்தார். அப்போதும் ஊரடங்கை மீறி செயல்பட்டதாக அவர் மீது போலீஸ் வழக்குப் பதிந்தது. 

கொரோனா முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டதிலிருந்து, சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்டதாகக் கூறி 22 மதுபானக் கடைகள் மற்றும் சாராயக் கடைகளுக்கு உரிமத்தை ரத்து செய்துள்ளது புதுச்சேரி அரசு.