லாக்டவுனை நீட்டித்த பிரதமர்! பொருளாதார மேம்படுத்தலுக்கு உதவிய வல்லுநர்களின் ஆய்வுகள்!!

இந்த நிலையில் இந்த முழு முடக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள சிறு குறு தொழில்துறைக்கு அரசு பொருளாதார தொகுப்பினை அறிவிக்கவில்லை என காங்கிரஸ் மத்திய அரசினை விமர்சித்திருந்தது.

லாக்டவுனை நீட்டித்த பிரதமர்! பொருளாதார மேம்படுத்தலுக்கு உதவிய வல்லுநர்களின் ஆய்வுகள்!!

கொரோனா வைரஸ்: முழு முடக்க நடவடிக்கையை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார்.

New Delhi:

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் இரண்டாவது முயற்சியாக ஏற்கெனவே 21 நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்த முழு முடக்க நடவடிக்கை(lockdown) தற்போது மே 3 வரை நீட்டிக்கப்படுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்திருந்தார். பல்துறை வல்லுநர்கள் மற்றும் பல மாநில முதல்வர்களுடனான கலந்துரையாடலுக்குப் பிறகு பிரதமர் இந்த முடிவினை எடுத்துள்ளார் என அரசு வட்டாரங்கள் என்.டிடிவிக்கு தெரிவித்துள்ளன. ஏற்கெனவே ஏற்பட்டிருந்த பொருளாதார மந்த நிலையும் தற்போது உள்ள சுகாதார அவசர நிலையில் ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்புகளையும் கவனத்தில் கொண்டு மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறியிருந்தார்.

கடந்த மாதத்தில் அறிவிக்கப்பட்ட முழு முடக்க நடவடிக்கையின்போதே இதற்கான முன் ஏற்பாடுகளாகத் திட்டங்கள் தயார் செய்யப்பட்டு, 11 குழுக்கள் உருவாக்கப்பட்டது. இந்த குழுக்கள் தொழில், கல்வித்துறை, சுகாதார வல்லுநர்கள் மற்றும் உழவர்கள் உள்ளிட்ட சமூக அமைப்புகளோடு தொடர்பு கொள்ள தொடங்கின. அங்கு மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளின் அடிப்படையிலேயே பிரதமர் சில தளர்வுகளை அறிவித்திருந்தார். விவசாய நடவடிக்கைகள், உற்பத்தி, தளவாடங்கள் மற்றும் மின் வணிகம் ஆகியவை கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் மெள்ள செயல்பட தொடங்குவதற்கான வாய்ப்பிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தன.

இந்த தளர்வுகளை மாநிலங்கள் அமல்படுத்தினாலும், முழுமையாக விலக்குகளை கொடுப்பதற்கு மாநிலங்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது அனுமதிக்கப்பட்டிருக்கும் தளர்வுகள் சமூக விலகலைக் கொண்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன.

கடந்த மாதம் அமல்படுத்தப்பட்டிருந்த முழு முடக்க நடவடிக்கை சரியாக பின்பற்றப்படவில்லை என மோடி குறிப்பிட்டிருந்தார். தற்போது வரக்கூடிய ஒரு வாரம் என்பது முக்கியமானதாக இருக்கும் என்றும், இக்காலகட்டங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் மோடி குறிப்பிட்டிருந்தார்.

தற்போதைய நிலையில் பொருளாதாரம் மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 4.8-5.0 சதவிகிதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி விகிதம், நடப்பு நிதியாண்டில் 1.5-2.8 சதவிகிதமாகக் குறையும் என்று உலக வங்கி இந்தியாவை எச்சரித்துள்ளது. நாட்டில் உள்ள பெரும்பான்மையான தொழிலாளர்கள் முறைசாரா தொழிலாளர்களா இருக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தினை உலக வங்கியின் இந்த கணிப்பு எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் இந்த முழு முடக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள சிறு குறு தொழில்துறைக்கு அரசு பொருளாதார தொகுப்பினை அறிவிக்கவில்லை என காங்கிரஸ் மத்திய அரசினை விமர்சித்திருந்தது.