This Article is From Mar 17, 2020

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியாவில் 3வது உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியாவில் 3வது உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியாவில் 3வது உயிரிழப்பு!

ஹைலைட்ஸ்

  • கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியாவில் 3வது உயிரிழப்பு!
  • அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் (39) பேர் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது
  • இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 125 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியாவில் மூன்றாவதாக ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே கர்நாடகா, டெல்லியில் தலா ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மகாராஷ்டிராவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் (39) பேர் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார மையம் கொரோனாவை தொற்று நோயாக அறிவித்த நிலையில், இந்தியாவில் மூன்றாவதாக ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா காரணமாக கடந்த வாரம் மட்டும் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் டெல்லியை சேர்ந்த 68 வயது பெண் மற்றொருவர் கர்நாடகாவை சேர்ந்த 76 வயது பெண். 

நாடுமுழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பள்ளிகள், கல்லூரிகள் மூட உத்தரவிட்டதோடு, உடற்பயிற்சி மையங்கள், நீச்சல் குளங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கூட்டம் கூடும் இடங்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருப்பவர்களை அடையாளம்
காணும் வகையில் அவர்கள் கையில் முத்திரையிடப்படுவார்கள் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

கொரோனா தொற்றுக்கு உலகளவில் 7,000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 143 நாடுகளுக்கு இந்த கொரோனா பாதிப்பு பரவியுள்ளது. சீனாவை அடுத்து, ஐரோப்பாவை தற்போது கொரோனாவின் தொற்று மையமாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. 
 

.