This Article is From Mar 21, 2020

கொரோனா அச்சத்தால் மாஸ்க் அணிந்து வீட்டிலேயே திருமணம் முடித்துக் கொண்ட ஜோடி!!

மகாராஷ்டிராவில் ரூபேஷ் ஜாதவ் என்ற 25 வயது வழக்கறிஞரும், ஐ.டி.யில் பணியாற்றும் 24 வயதான பிரியங்கான என்ற பெண்ணும் திருமணம் முடித்துக் கொண்டுள்ளனர்.

கொரோனா அச்சத்தால் மாஸ்க் அணிந்து வீட்டிலேயே திருமணம் முடித்துக் கொண்ட ஜோடி!!

கொரோனா அச்சத்தால் 20 பேர் மட்டுமே திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

ஹைலைட்ஸ்

  • கொரோனா அச்சுறுத்தலால் சுப நிகழ்ச்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன
  • புதிதாக திருமண நிகழ்ச்சிகள் மண்டபத்தில் புக் செய்யப்படுவதில்லை
  • அனைத்து தரப்பினரையும் கொரோனா கடுமையாக பாதித்துள்ளது.
Thane:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இளம் ஜோடி ஒன்று மாஸ்க் அணிந்துகொண்டு வீட்டிலேயே திருமணத்தை முடித்துக் கொண்டது. இந்த நிகழ்ச்சிக்கு 20 பேர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவால் 60-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டியே இந்த மாநிலத்தில்தான் பாதிப்பு அதிகமாக உள்ளது.

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் ரூபேஷ் ஜாதவ் என்ற 25 வயது வழக்கறிஞரும், ஐ.டி.யில் பணியாற்றும் 24 வயதான பிரியங்கான என்ற பெண்ணும் நேற்று திருமணம் முடித்துக் கொண்டுள்ளனர்.

கல்யாண் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது. திருமணத்தின்போது மணமக்கள் அடிக்கடி சானிட்டைசரை பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்து கொண்டனர். 

இதுகுறித்து மணமகன் ரூபேஷ் கூறுகையில், 'மார்ச் 22-ம்தேதிதான் எங்களது திருமணம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. எங்களது திருமணத்திற்காக மண்டபத்தை புக் செய்திருந்தோம். பத்திரிகைகள் பிப்ரவரி மாதமே உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் திருமணத்தை 2 நாட்களுக்கு முன்கூட்டியே சிம்ப்பிளாக முடித்துக் கொண்டுள்ளோம்.'

கடந்த வியாழன் அன்று பேசிய பிரதமர் மோடி, மார்ச் 22-ம்தேதியை சுய ஊரடங்காக கடைபிடிக்க வேண்டும் என்றும், அன்றைய தினம் மக்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதையடுத்து மறுநாளே இந்த ஜோடி அவசரம் அவசரமாக திருமணம் செய்துகொண்டுள்ளது. 
 

.