This Article is From Apr 17, 2020

சென்னையில் சுகாதார பணியாளர்களைப் பாதுகாக்கும் மாற்றுத் திறனாளி பெண்களின் கரங்கள்!!

இப்படியாகத் தயாரிக்கப்படும் மீண்டும் பயன்படுத்தும் முககவசங்களுக்கா துணிகளை மாநகராட்சி வழங்கிவருகிறது. மேலும், அவர்களின் உழைப்பினை அங்கீகரிக்கப் பொருளாதார உதவிகளையும் மாநகராட்சி செய்து வருகிறது.

மாற்றுத் திறனாளி பெண்கள் தயாரிக்கும் முககவசங்களுக்கு தேவையான துணிகளை மாநகராட்சி வழங்குகிறது.

Chennai:

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1267 ஆக உயர்ந்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 217 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில் முககவசம் இன்றி பொது வெளியில் புழங்கும் மக்களுக்கு 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இச்சூழலில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வீடற்றவர்கள் தங்குமிடத்தில் தங்கியுள்ள மாற்றுத் திறனாளி பெண்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய முககவசத்தினை தயாரித்து வருகிறார்கள். சமூக விலகலைக் கடைப்பிடித்து இயங்கும் இவர்கள் நாளொன்றுக்கு 10  மணிநேர உழைப்பில் 300 முககவசங்களை தயாரிக்கின்றனர். சுகாதார ஊழியர்கள் வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் முககவசங்களை தின்ந்தோரும் வாங்க வாய்ப்பில்லாத சூழலில் அவர்களுக்கு மாற்றுத்திறனாளி பெண்கள் தயாரிக்கும் முககவசங்கள் பயன்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளில், சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்ட வீரரான மாடில்டா ஃபன்செக்கா கடந்த சில ஆண்டுகளாக இங்குத் தங்கி வருகிறார். தற்போது தன்னுடைய முழு நேரத்தையும் இங்கு அவர் பயன்படுத்தி வருகிறார். “கொரோனா தொற்றுக்கு எதிரான களத்தில் போர் வீரர்களாக நிற்கும் சுகாதார பணியாளர்களைப் பாதுகாக்க நாங்கள் அரசாங்கத்திற்கு உதவி வருகிறோம்.” என்று மாடில்டா என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மாடில்டா அவருடைய தோழிகளுடன் இணைந்து இப்பணியினை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்.

tmh8bq3g

இப்படியாகத் தயாரிக்கப்படும் மீண்டும் பயன்படுத்தும் முககவசங்களுக்கா துணிகளை மாநகராட்சி வழங்கிவருகிறது. மேலும், அவர்களின் உழைப்பினை அங்கீகரிக்கப் பொருளாதார உதவிகளையும் மாநகராட்சி செய்து வருகிறது.

இவ்வாறாகத் தையல் தொழிலில் அக்கம் பக்கத்தில் பிரபலமாக இருக்கும் சாந்தி, தனது புதிய வேலையான முககவசம் தயாரிப்பதைப் பெரிதும் விரும்புகிறார். “முககவசம் அணிவது தொற்றைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.  சாதாரண விளிம்பு நிலையில் உள்ள சுகாதார பணியாளர்கள் வணிக பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் முககவசங்களை தினந்தோறும் விலைக்கு வாங்குவது சாத்தியமற்றது. இந்த நிலையில் நாங்கள் தயாரிக்கும் முககவசங்ள் அவர்களுக்கு நிச்சயம் பயன்படும். இதனால் நாங்கள் பெருமையடைகிறோம்.” என சாந்தி கூறியுள்ளார்.

lb2mcek8

முககவசம் தயாரிக்க வெட்டப்பட்டு சீராக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காட்சி

சென்னையில் மாற்றுத் திறனாளி பெண்களுக்கான புனர்வாழ்வு மையமான பெட்டர் வேர்ல்ட் ஷெல்டரின் நிறுவனரும், குழந்தை மருத்துவருமான ஐஸ்வர்ய ராவ், “இவ்வாறு தங்கும் இடங்களிலிருந்து நெருக்கடியான சூழலிலும்  அவர்கள் கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக இயங்கக்கூடிய மருத்துவரல்லாத சுகாதார பணியாளர்களுக்குப் பெரிதும் உதவுகின்றனர்.”  என்று கூறியுள்ளார்.

இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து 81 பேர் மீண்டுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.