இந்தியாவில் ஒரே நாளில் 48,000 பேருக்கு கொரோனா தொற்று; மொத்த பாதிப்பு 15.31 லட்சமாக உயர்வு!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 6,972 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 48,000 பேருக்கு கொரோனா தொற்று; மொத்த பாதிப்பு 15.31 லட்சமாக உயர்வு!

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் ஒரே நாளில் 48,000 பேருக்கு கொரோனா தொற்று
  • மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 15,31,669 ஆக அதிகரித்துள்ளது
  • இதுவரை 9,88,029 பேர் குணமடைந்துள்ளனர்
New Delhi:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக 48,513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 768 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 15,31,669 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சகம் தகவல் தெரியவந்துள்ளது. நாட்டில் இதுவரை 9,88,029 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைபவர்களின் எண்ணிக்கை 64.50 சதவீதமாக உள்ளது. 

உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் அமெரிக்கா மற்றும் பிரசிலை தொடர்ந்து, இந்தியா மூன்றாவதாக இந்தியா உள்ளது. 

நாட்டிலே அதிகம் பாதிப்பு உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அதைத்தொடர்ந்து, தமிழகம், டெல்லி, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, உத்தர பிரதேசம், மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. 

மகாராஷ்டிராவில் 3,91,440 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 14,165 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2 நாட்களாக மும்பையில் பாதிப்பு எண்ணிக்கை குறைவாக பதிவாகி வருகிறது. 

Newsbeep

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 6,972 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 2,27,688 ஆக உயர்ந்துள்ளது. 

டெல்லியில் நேற்றைய தினம் புதிதாக 1,056 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,32,275 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 28 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,881 ஆக உயர்ந்தது. 613 வழக்குகள் இருந்த முந்தைய நாளையே விட நேற்று பாதிப்பு அதிகமாக இருந்தது, இது இரண்டு மாதங்களில் இல்லாத மிகக் குறைந்த பாதிப்பு எண்ணிக்கையாகும். 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் அதிகரிப்பதாக ஆந்திரா அரசு தெரிவித்துள்ளது, இது மகாராஷ்டிராவை விட அதிகமாக உள்ளது. 1,10,297 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ள மாநிலத்தில், எட்டு நாட்களில் வழக்குகள் இரட்டிப்பாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, எந்தவொரு மருத்துவமனையிலும் எந்தவொரு நோயாளிக்கும் 30 நிமிடங்களுக்குள் படுக்கை வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார், இல்லையெனில் ஆட்சியர் மற்றும் துணை ஆட்சியர் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.