வேகமெடுக்கும் கொரோனா! நாடு முழுவதும் ஒரே நாளில் 22,771 பேர் பாதிப்பு!!

கடந்த 24 மணி நேரத்தில் நாடு  முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவாக 22,771 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 442 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

மகாராஷ்டிராவில் 1,92,990 ஆக உயர்ந்துள்ளது கொரோனா தொற்று எண்ணிக்கை

ஹைலைட்ஸ்

  • நாடு முழுவதும் கொரோனா எண்ணிக்கையானது 6,48,315 ஆக அதிகரித்துள்ளது
  • 2,35,433 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • 18,655 பேர் உயிரிழந்துள்ளனர்.
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 6,48,315 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2,35,433 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,94,227 பேர் குணமடைந்துள்ளனர். 18,655 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு  முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவாக 22,771 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 442 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 6,48,315 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2,35,433 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,94,227 பேர் குணமடைந்துள்ளனர். 18,655 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு  முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவாக 22,771 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 442 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தொற்றால் பாதிக்கப்பட்ட நகரங்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒட்டு மொத்தமாக 1,92,990 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதே போல உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 8,376 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 198 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நேற்று 4,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 35,028 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரையில் 12 லட்சத்து 13 ஆயிரத்து 891 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 2,357 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு டிஸ் சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 58,378 பேர் குணம் பெற்றுள்ளார்கள்.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 1,694 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது 19,710 ஆக உயர்ந்துள்ளது. அதே போல கடந்த 24  மணி நேரத்தில் 21 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதும் 293 பேர் உயிரிழந்துள்ளனர்.

தேசிய தலைநகர் டெல்லியிலும் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரே நாளில் 3,947 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது 94 ஆயிரத்தினை கடந்துள்ளது. இதுவரை 2,923 பேர் கொரோனா தொற்றால் டெல்லியில் உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தினை பொறுத்த அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 687 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கையை 34,600ஆக அதிகரிக்கச் செய்துள்ளது. மாநிலம் முழுவதும் தொடர்ந்து ஏழாவது நாளாக 600க்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் வடகிழக்கு மாநிலமான அசாமில், தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒன்பது நாட்களில் இந்த எண்ணிக்கை 1,900 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,799 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா பரிசோதனைக்கு புதிய வழிமுறையை அரசு பின்பற்ற முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக தினசரி 10,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தற்போது 11,000 வெண்டிலேட்டர்களை தயாரித்து 6,154  மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் 1.10 கோடி மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5.25 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர் என அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதில் தோல்வியை சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 57,683 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 728 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,29,405 ஆக அதிகரித்துள்ளது.