அச்சுறுத்தும் கொரோனா! ஒரே நாளில் நாடு முழுவதும் 20,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!!

கடந்த 24 மணி நேரத்தில் நாடு  முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவாக 20,903 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 379 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அச்சுறுத்தும் கொரோனா! ஒரே நாளில் நாடு முழுவதும் 20,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!!

ஹைலைட்ஸ்

  • நாடு முழுவதும் கொரோனா எண்ணிக்கையானது 6,25,544 ஆக அதிகரித்துள்ளது
  • 2,27,439 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • 213 பேர் உயிரிழந்துள்ளனர்.
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 6,25,544 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2,27,439 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,79,892 பேர் குணமடைந்துள்ளனர். 18,213 பேர் உயிரிழந்துள்ளனர்.


கடந்த 24 மணி நேரத்தில் நாடு  முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவாக 20,903 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 379 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில், 1,86,626 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 6,000க்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மும்பையில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனையில், தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையானது, 18 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டதால் தொற்று பரவும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரையில்லாத அளவுக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று மட்டும் 4,343 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. திடீர் உயர்வால், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 33,488 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குணம் அடைந்தவர்களை தவிர்த்து தமிழகத்தில் தற்போது 41,047 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,095 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். தமிழகத்தில் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 56,021 ஆக உயர்ந்துள்ளது.

தேசிய தலைநகர் டெல்லியானது 92,175 கொரோனா தொற்று நோயாளிகளுடன், தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பிலாஸ்மா சிகிச்சை முறையை டெல்லி தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக நாட்டில் முதல் முறையாக டெல்லியில் பிலாஸ்மா வங்கி தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிலஸ்மா தானம் செய்பவர்கள், தாமாக முன்வந்து தானம் செய்யுமாறு முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1,502 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாநில தலைநகரான பெங்களூரூவில் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை உயர்ந்து வரக்கூடிய நிலையில், மாநில அரசு வீட்டு தனிமைப்படுத்தலுக்கு புதிய விதிமுறைகளை வழங்கியுள்ளது.

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 160 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல 202 பேர் குணமடைந்துள்ளனர். இது முன்னெப்போதும் இல்லாத உயர்வாகும். முன்னதாக மாநில அரசு குணமடைந்தவர்களுக்கான வரைமுறையை மாற்றியமைத்துள்ளது. தொற்று பரிசோதனையில் ஒரு முறை நெகட்டிவ் என வந்தால் மருத்துவமனையிலிருந்து வெளியேற்ற மாநில அரசு புதியதாக உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஒரு கொடியை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 5.21 லட்சமாக அதிகரித்துள்ளது.

உலக வல்லரசான அமெரிக்கா தொடர்ந்து கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த திணறி வருகின்றது. இந்நிலையில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரம் தொற்றால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.