மருத்துவமனையிலிருந்து தந்தையின் இறுதிச் சடங்கைப் பார்த்த மகன்

அவருடைய தந்தை அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் கொரோனா வைரஸ் வார்டில் மருத்துவரைச் சந்தித்த அவர், கத்தாரில் இருந்து தனது பயண வரலாறு காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையிலிருந்து தந்தையின் இறுதிச் சடங்கைப் பார்த்த மகன்

லினோ ஆபெல் தனது தந்தையின் கடைசி சடங்குகளை வீடியோ அழைப்பு மூலம் பார்த்தார்

Kottayam:

30 வயதான லினோ ஆபெல் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வார்டின் ஜன்னல் வழியாக உதவியற்ற முறையில் அவரது தந்தையின் சடலத்தை ஆம்புலன்ஸ் மூலம் இறுதி பயணத்திற்காக வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டதைப் பார்க்கும் காட்சிகள் அனைவரின் இதயத்திலும் ஈரத்தினை கசிய வைத்திருக்கின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றான கத்தாரில் இருந்து விரைந்து வந்த லினோ ஆபெல், உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுப் படுக்கையில் இருக்கும் தனது தந்தையுடன் இருக்க விரும்பினார்.

இருப்பினும்,  COVID-19 பாதிப்புக்குள்ளான நாட்டிலிருந்து பயண வரலாறு மற்றும் லேசான இருமல் இருந்த அவர், உடனடியாக தன்னை சுகாதார அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ளச் செய்து, கோட்டயத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தனிமை வார்டில் அனுமதித்துக்கொண்டார்.

இந்த நிலையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவரது தந்தையின் நிலை மோசமடைந்து மார்ச் 9 அன்று காலமானார்.

ஆபேல் அதே மருத்துவமனையில் இருந்தபோதிலும், அவர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்ததால் கடைசியாக ஒரு முறை கூட தந்தையைப் பார்க்க முடியவில்லை. ஆம்புலன்ஸ் தனது தந்தையின் உடலை எடுத்துச் சென்றபோது, ​​அவர் தனது அறையின் ஜன்னலிலிருந்து கடைசி காட்சியைப் பார்த்தார்.

அவர் தனது தந்தையின் கடைசி சடங்குகளை வீடியோ அழைப்பு மூலம் பார்த்தார்.

"நான் என்னை மருத்துவமனையில் அனுமதித்துக்கொள்ளவில்லை என்றால், நான் கடைசியாக ஒரு முறை என் அப்பாவைப் பார்த்திருக்க முடியும். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை, ஏனென்றால் நான் ஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால் நோயைப் பரப்ப நேரிடும் என்று முடிவு செய்து, மருத்துவமனையில் வந்து சேர்ந்துகொண்டேன். இங்குள்ள வெளிநாட்டவர்கள் சுகாதார அதிகாரிகளிடம் தங்களை குறித்துத் தெரிவித்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு சில நாட்களை மருத்துவமனையில் செலவழித்துக்கொண்டால், மீதமுள்ள நேரத்தை உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் செலவிடலாம், "என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

"தனிமை வார்டு ஒரு வதை முகாம் அல்ல" என்று லினோ ஆபெல் மார்ச் 12 அன்று தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்தார், அதில் அவர் தனது அவல நிலையை விவரிக்கிறார், ஆனால் வெளிநாட்டவர்கள் தங்கள் குடும்பங்களைப் பாதுகாக்க தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது தந்தையைச் சந்திக்கக் கேரளாவை அடைந்த போதிலும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள ஆபெல் எடுத்த முடிவு, முதலமைச்சர் பினராயி விஜயன் உட்பட பலரால் (லினோ ஆபெலின்) சமூக அர்ப்பணிப்புக்காகப் பாராட்டப்பட்டது."

வைரலாகிவிட்ட பேஸ்புக் பதிவில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தனது தந்தையுடன் நேரத்தைச் செலவழிக்கத் தான் கேரளாவை அடைந்ததாகவும், ஆபெல் கூறுகிறார்.

"நான் விமான நிலையத்தில் தேவையான படிவங்களைப் பூர்த்தி செய்து மருத்துவமனையை அடைந்தேன். எனது வெப்பநிலை இயல்பானதாக இருந்தாலும் எல்லோரிடமிருந்தும் நான் இடைவெளியை கவனத்தில் கொண்டிருந்தேன். தொண்டையில் லேசான இருமல் மற்றும் எரிச்சலை நான் உணர்ந்த போது. மருத்துவரைச் சந்தித்ததாக " லினோ ஆபெல் குறிப்பிட்டிருந்தார்.

அவருடைய தந்தை அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் கொரோனா வைரஸ் வார்டில் மருத்துவரைச் சந்தித்த அவர், கத்தாரில் இருந்து தனது பயண வரலாறு காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

"இரவின் பிற்பகுதியில், அப்பாவுக்குப் பக்கவாதம் ஏற்பட்டுக் காலமானார். நான் அவருக்கு மிக அருகில் இருந்தேன், ஆனால் நான் தனிமை வார்டில் இருந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், அவரது இரத்த பரிசோதனை முடிவு சனிக்கிழமையன்று எதிர்மறையாக மாறியது. இந்நிலையில் லினோ ஆபெல் இடுகி மாவட்டத்தின் தொடுபுஜாவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்புவார்.