இந்தியாவில் 8 மாத குழந்தைக்கு கொரோனா பாதிப்பு!! மருத்துவர்கள் அதிர்ச்சி!

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட குறைந்த வயதுடைய நபராக இந்த 8 மாத குழந்தை கருதப்படுகிறார்.

இந்தியாவில் 8 மாத குழந்தைக்கு கொரோனா பாதிப்பு!! மருத்துவர்கள் அதிர்ச்சி!

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 650-யை கடந்துள்ளது.

Srinagar:

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் 8 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காஷ்மீரில் 65 வயது நபர் ஒருவர் கொரோனா பாதிப்பால் செவ்வாயன்று உயிரிழந்தார். காஷ்மீரில் கொரேனாவால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும். முதியவருடைய பேரப்பிள்ளைகளான 8 வயது குழந்தை மற்றும் 7 வயது சிறுவர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து காஷ்மீர் அரசின் செய்தி தொடர்பாளர் ரோஹித் கன்சால் தனது ட்விட்டர் பதிவில், 'ஸ்ரீநகரில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவுக்கு சென்று விட்டு திரும்பிய 65 நபர் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவரின் பேரப்பிள்ளைகள் 8 மாத குழந்தை மற்றும் 7 வயது சிறுவர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்று தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த 65 வயது முதியவரின் ஒட்டுமொத்த குடும்பமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அவர் யார் யாரிடமெல்லாம் தொடர்பிலிருந்தார் என்ற விவரம் சேகரிக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபருடன் சுமார் 70-க்கும் அதிகமானோர் தொடர்பிலிருந்ததாகவும், அவர்களில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளன. 

உயிரிழந்த 65 வயது நபர், மார்ச் 16-ம்தேதி காஷ்மீருக்கு திரும்பியுள்ளார். அதற்கு முன்பாக அந்தமான் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு அவர் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த தகவல்தான் மேலும் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. 

Listen to the latest songs, only on JioSaavn.com