தமிழகத்தில் கொரோனா பரவல் முதற்கட்டத்திலேயே உள்ளது: முதல்வர் அறிவிப்பு!

Coronavirus in Tamilnadu: "144 தடை உத்தரவு மக்களையும், நாட்டையும் பாதுகாப்பதற்கே"

தமிழகத்தில் கொரோனா பரவல் முதற்கட்டத்திலேயே உள்ளது: முதல்வர் அறிவிப்பு!

Coronavirus in Tamilnadu: "144 தடை உத்தரவின்படி பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும்"

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் இதுவரை 35 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
  • தமிழகத்தில் ஒருவர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார்
  • கடந்த செவ்வாய் கிழமை முதல் இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளது

Coronavirus in Tamilnadu: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக புதிதாக இன்று 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. 

நேற்று, ''திருச்சியைச் சேர்ந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் துபாயிலிருந்து திருச்சிக்கு வந்தவர். அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது'' என்று கூறியிருந்தார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

அதைத் தொடர்ந்து மேலும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறினார் விஜயபாஸ்கர். புதிதாகப் பாதிக்கப்பட்ட 2 பேரும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று வரை தமிழகத்தில் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போதும் மேலும் 6 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கொரோனா பரவல் குறித்துப் பேசியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் கொரோனா பரவல் முதற்கட்டத்திலேயே உள்ளது;  கொரோனா தொற்றை தடுக்க ஒரே வழி அனைவரையும் தனிமைப்படுத்திக் கொள்வதே

144 தடை உத்தரவு மக்களையும், நாட்டையும் பாதுகாப்பதற்கே; 144 தடை உத்தரவின்படி பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும்,” என்று கூறியுள்ளார். 
 


 

Listen to the latest songs, only on JioSaavn.com