"ஞாயிறன்று மாலை 5 மணிக்கு வீட்டின் மொட்டை மாடி அல்லது ஜன்னலுக்கு வந்து 5 நிமிடம் நில்லுங்கள். அப்போது கைகளை தட்டி, மணியடித்து உங்களது நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள்."
ஹைலைட்ஸ்
- பிரதமர் மோடி, மக்கள் ஊரடங்கு திட்டத்தை அறிவித்துள்ளார்
- இது குறித்து பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார்
- பிரதமரின் இந்த திட்டத்துக்குதான் சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார்
பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஞாயிற்றுக் கிழமையான மார்ச் 22 ஆம் தேதி, ‘மக்கள் ஊரடங்கு' என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். இதற்குக் காங்கிரஸின் முக்கியப் புள்ளியான சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 173-ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், கொரோனாவின் தாக்கம், அதிலிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் செய்ய வேண்டியது உள்ளிட்டவை தொடர்பாகப் பிரதமர் மோடி நேற்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
I welcome @PMOIndia@narendramodi 's call to solidarity at this challenging time. Will support #JanataCurfew while conscious that Sunday is the easiest day to try it. Need more reinforcement of social distancing (incl suspending Parliament) & specific economic relief measures
- Shashi Tharoor (@ShashiTharoor) March 19, 2020
அவர், “அடுத்து வரும் சில வாரங்களுக்கு அவசியம் ஏற்பட்டாலே தவிர, மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம். மக்கள் ஊரடங்கு உத்தரவை ஞாயிறு முதற்கொண்டு பின்பற்றி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிருங்கள்.
நாம் பொறுப்புள்ள குடிமக்களாக இருக்க வேண்டும். மத்திய மாநில அரசுகளின் உத்தரவுகளை ஏற்று நடக்க வேண்டும். உணவு போன்ற அடிப்படைத் தேவைப் பொருட்களைப் பதுக்க வேண்டாம். பற்றாக்குறையைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா வைரஸ் நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது. நிதியமைச்சர் தலைமையிலான குழு இதனைச் சரி செய்யும். நமக்குச் சேவைகளைத் தொடர்ந்து வழங்கும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளுங்கள். ஞாயிறன்று மாலை 5 மணிக்கு வீட்டின் மொட்டை மாடி அல்லது ஜன்னலுக்கு வந்து 5 நிமிடம் நில்லுங்கள். அப்போது கைகளைத் தட்டி, மணியடித்து உங்களது நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள்.
கொரோனாவை சரி செய்ய மருந்து கிடையாது. நாம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். வழக்கம்போல சுதந்திரமாக நடமாடினால் நீங்கள் உங்களையும், உங்களது குடும்பத்தினரையும் ஆபத்தில் தள்ளப் பார்க்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்,” என்று உரையாற்றினார்.
பிரதமரின் இந்த திட்டத்துக்கு சசி தரூர், “இப்படிப்பட்ட சவாலான நேரத்தில் மக்களின் ஒற்றுமைக்குக் குரல் கொடுக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் அறைகூவலுக்கு நானும் ஆதரவளிக்கிறேன். மக்கள் ஊரடங்கு திட்டத்துக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். அதே நேரத்தில் ஞாயிற்றுக் கிழமைதான் இந்த திட்டத்தைச் சுலபமாகச் செயல்படுத்த முடியும் என்பதையும் உணர்கிறேன். மற்றவர்களிடத்திலிருந்து தள்ளியிருக்க இன்னும் நிறைய நடவடிக்கைகள் தேவை மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கத் திட்டங்கள் வேண்டும்,” என்று கருத்து தெரிவித்துள்ளார். அவர், “அடுத்து வரும் சில வாரங்களுக்கு அவசியம் ஏற்பட்டாலே தவிர, மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம். மக்கள் ஊரடங்கு உத்தரவை ஞாயிறு முதற்கொண்டு பின்பற்றி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிருங்கள்.
நாம் பொறுப்புள்ள குடிமக்களாக இருக்க வேண்டும். மத்திய மாநில அரசுகளின் உத்தரவுகளை ஏற்று நடக்க வேண்டும். உணவு போன்ற அடிப்படைத் தேவைப் பொருட்களைப் பதுக்க வேண்டாம். பற்றாக்குறையைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா வைரஸ் நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது. நிதியமைச்சர் தலைமையிலான குழு இதனைச் சரி செய்யும். நமக்குச் சேவைகளைத் தொடர்ந்து வழங்கும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளுங்கள். ஞாயிறன்று மாலை 5 மணிக்கு வீட்டின் மொட்டை மாடி அல்லது ஜன்னலுக்கு வந்து 5 நிமிடம் நில்லுங்கள். அப்போது கைகளைத் தட்டி, மணியடித்து உங்களது நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள்.
கொரோனாவை சரி செய்ய மருந்து கிடையாது. நாம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். வழக்கம்போல சுதந்திரமாக நடமாடினால் நீங்கள் உங்களையும், உங்களது குடும்பத்தினரையும் ஆபத்தில் தள்ளப் பார்க்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்,” என்று உரையாற்றினார்.
பிரதமரின் இந்த திட்டத்துக்கு சசி தரூர், “இப்படிப்பட்ட சவாலான நேரத்தில் மக்களின் ஒற்றுமைக்குக் குரல் கொடுக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் அறைகூவலுக்கு நானும் ஆதரவளிக்கிறேன். மக்கள் ஊரடங்கு திட்டத்துக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். அதே நேரத்தில் ஞாயிற்றுக் கிழமைதான் இந்த திட்டத்தைச் சுலபமாகச் செயல்படுத்த முடியும் என்பதையும் உணர்கிறேன். மற்றவர்களிடத்திலிருந்து தள்ளியிருக்க இன்னும் நிறைய நடவடிக்கைகள் தேவை மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கத் திட்டங்கள் வேண்டும்,” என்று கருத்து தெரிவித்துள்ளார்.