This Article is From Mar 18, 2020

மலேசிய விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் 300 இந்தியர்கள்!! மீட்புப் பணியில் மத்திய அரசு!

பிலிப்பைன்ஸ், கம்போடியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் படித்து வரும் இந்திய மாணவர்கள் 300 பேர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் உள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மலேசிய விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் 300 இந்தியர்கள்!! மீட்புப் பணியில் மத்திய அரசு!

கேரளா, பெங்களூரு, சென்னைக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Thiruvananthapuram:

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மலேசியாவிலிருந்து கேரளா, பெங்களூரு, சென்னைக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் கோலாலம்பூர் விமான நிலையத்தில் சுமார் 300 இந்தியர்கள் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

பிலிப்பைன்ஸ், கம்போடியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் படித்து வரும் இந்திய மாணவர்கள் 300 பேர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் உள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மாணவர்களில் பெரும்பாலானோர் கேரளாவை சேர்ந்தவர்கள். அவர்கள் மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் உதவியை நாடினர். இதுகுறித்து பெண் ஒருவர், 'நாங்கள் பிலிப்பைன்ஸில் படித்து வரும் இந்திய மாணவர்கள். எங்களது விமானம் ரத்து செய்யப்பட்டதால் நாங்கள் இங்கு சில மணி நேரங்களாக தவித்து வருகிறோம். எங்களை பிலிப்பைன்ஸ் அரசும் அழைக்கவில்லை. இந்திய அரசும் எங்களை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை. இந்திய அதிகாரிகளை நாங்கள் தொடர்புகொண்டு வருகிறோம். மீண்டும் பிலிப்பைன்ஸ் செல்ல நாங்கள் விரும்பவில்லை' என்று கூறுகிறார்.
 

இந்த வீடியோ காட்சி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-

இந்திய மாணவர்களை பாராட்டுகிறேன். இந்த இக்கட்டான சூழலில் நீங்கள் கோலாலம்பூர் விமான நிலையத்தில் உள்ளீர்கள். ஏர் ஆசியா விமானம் உங்களை அழைத்துக்கொண்டு டெல்லி மற்றும் விசாகப்பட்டினத்திற்கு வர நாங்கள் ஒப்புதல் அளித்துள்ளோம். நிலைமை மோசமாக இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். ஏர் ஆசியா விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இவ்வாறு ஜெய் சங்கர் கூறியுள்ளார்.

மாணவர்கள் போர்டிங் பாஸ் எடுத்துக் கொண்டு விமான நிலையத்திற்கு உள்ளே வந்த பின்னர் அவர்களிடம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

கேரளா, பெங்களூரு, சென்னைக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநிலங்களவை எம்.பி. ஜோஸ் கே மாணி கூறுகையில், 'இந்திய அதிகாரிகளிடம் தொடர்பில் உள்ளேன். கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள்' என்றார். 

இன்னொரு வீடியோவில் அழுதுகொண்டே பெண் ஒருவர், தன்னை இத்தாலியிலிருந்து மீட்டுச் செல்லுமாறு கோரிக்கை வைக்கிறார். 'நான் மத்திய மாநில அரசுகளிடம்தான் கோரிக்கை வைக்க முடியும். எங்களால் இந்தியாவுக்கு வர முடியுமா என்பதை மட்டும் எங்களுக்குத் தெளிவுபடுத்துங்கள்' என்கிறார் அவர். 


 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.