This Article is From Apr 09, 2020

இந்தியாவிலேயே முதன்முறையாக ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டித்த மாநிலம்!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினை நீட்டித்த முதல் மாநிலமாக ஒடிசா உள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டித்த மாநிலம்!

ஊரடங்கு உத்தரவினை ஏப்ரல் 30 வரை நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • Naveen Patnaik has asked centre not to start train, flights till April 30
  • "Life will not be the same ever,"the Odisha Chief Minister said
  • Educational institutions in Odisha will remain closed till June 17
Bhubaneswar:

தேசிய அளவில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில். தற்போது ஒடிசா மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவினை ஏப்ரல் 30 வரை நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். மேலும், இந்த இடைப்பட்ட காலங்களில் விமானம் மற்றும், ரயில் போக்குவரத்துகளை தங்கள் மாநிலங்களில் இயக்க வேண்டாம் என மத்திய அரசினை முதல்வர் பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த முடிவினை மாநில அமைச்சரவை மேற்கொண்டுள்ளதாகவும், இதனை அமலாக்க மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினை நீட்டித்த முதல் மாநிலமாக ஒடிசா உள்ளது.

இந்த தொற்றானது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த நூறு ஆண்டுகளில் மனிதன் கண்டிராத தொற்று. மனிதனின் வாழ்வு எப்போதும் நிலையானதாக இருப்பதில்லை. இதை நாம் அனைவரும் புரிந்துகொண்டு தைரியமாக ஒன்றாக நமது தியாகத்துடனும், ஜெகந்நாதரின் ஆசீர்வாதத்துடனும் எதிர்கொள்ள வேண்டும் என்று முதல்வர் பட்நாயக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கல்வி நிறுவனங்கள் ஜூன் 17 வரை மூடப்படும் என்றும், அதே போல மக்களின் உணவு தேவையைக் கணக்கில் கொண்டு, விவசாயம், கால்நடைகள் மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் போன்றவை சமூக இடைவெளியினை உறுதி செய்து அனுமதிக்கப்படும் என்றும், தடையில்லா சரக்கு போக்குவரத்து உறுதி செய்யப்படும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இம்மாநிலத்தில் 42 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக, ஏப்ரல் 14 அன்று கட்டுப்பாடுகள் ஒரே நேரத்தில் விலக்கிக்கொள்ளப்படாது என்று பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். தொற்று பரவலின் மையமாகக் கண்டறியப்பட்ட பல இடங்கள் தற்போது முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

டெல்லி, மும்பை, சண்டிகர், மற்றும் நாகாலாந்தைப் போல ஒடிசா அரசும் அனைவரும் கட்டாயமாக முககவசங்களை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. சமீபத்தில் அனைத்துக்கட்சித் தலைவர்களுடனான கலந்தாலோசனையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் தான் ஆலோசனை நடத்தப்போவதாகப் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதனால், உடனடியாக தற்போது நடைமுறையில் உள்ள முழு முடக்க நடவடிக்கை திரும்பப்பெறப்படாது என்று தெரியவருகிறது.  ஏனெனில், பல மாநிலங்கள், மற்றும் நிபுணர்கள் இந்த தொற்று வரும் வாரங்களில் அதிக அளவில் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும், இதன் காரணமாக முழு முடக்க நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளன.

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths

.