This Article is From Apr 08, 2020

கொரோனா தொற்று: முககவசங்களை கட்டாயமாக்கும் மும்பை!

பொது இடங்கள், அலுவலகங்கள், மற்றும் வாகன ஓட்டிகள் கூட கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என்று நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

கொரோனா தொற்று: முககவசங்களை கட்டாயமாக்கும் மும்பை!

இந்தியாவின் மற்ற நகரங்களைக் காட்டிலும் மும்பையில்தான் அதிக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Mumbai:

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதல் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. 2 கோடிக்கும் அதிக மக்கள் தொகை கொண்ட மும்பை நகரில் 782 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 50 பேர் உயிரிழந்திருக்கக்கூடிய நிலையில் தற்போது, மும்பை பெருநகர் நிர்வாகம் முககவசங்களை கட்டாயமாக்கியுள்ளது.

இந்த உத்தரவினை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மும்பை பெருநகர் நிர்வாகம் அறிவித்துள்ளது. கைது செய்யப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. பொது இடங்கள், அலுவலகங்கள், மற்றும் வாகன ஓட்டிகள் கூட கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என்று நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட முககவசங்கள் அல்லது வீட்டில் பயன்படுத்தக்கூடிய துணிகளை வைத்து தயாரிக்கப்பட்ட முககவசங்களாக இருந்தாலும் பயன்படுத்தலாம். வீட்டில் பயன்படுத்தப்படும் துணிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் முககவசங்களை மறு முறை பயன்படுத்தும் போது கிருமிகள் நீக்கப்படும் வரை துவைத்து பயன்படுத்துமாறு, மும்பை பெருநகர நகராட்சி ஆணையர் பிரவீன் பர்தேஷி கையெழுத்திட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே செல்லும்போது முககவசங்களை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சண்டிகர், நாகாலாந்து மற்றும் ஒடிசாவில் உள்ள அதிகாரிகள் ஏற்கனவே தங்கள் மாநிலங்களில் முககவசங்களை அணிவதை கட்டாயமாக்கியுள்ளனர். ஆசியாவின் மிகப் பெரிய குடிசைவாழ் பகுதியான மும்பையின் தாராவி பகுதியில் தற்போது இரண்டு பேர் கொரோனா தொற்று உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏற்கெனவே ஏழு பேர் இதே பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் தொற்று பாதிப்புகளைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளால் நதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 30 வரை முழு முடக்க நடவடிக்கைகளை நீட்டிக்க வாய்ப்புள்ளது என்று செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தது.

பிரதமரின் முழு முடக்க உத்தரவானது இம்மாதம் 14 –ம் தேதியோடு முடிவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தக்கரே,  மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு குறித்து தான் மன்னிப்பு கோருவதாகவும், மேலும் "எங்களுக்கு வேறு வழியில்லை" என்றும், கொரோனா வைரஸுக்கு எதிரான "போரில்" சேர முன்னாள் பாதுகாப்பு சுகாதார சேவை பணியாளர்கள், ஓய்வு பெற்ற செவிலியர்கள் மற்றும் வார்டு உதவியாளர்களுக்கு அவர் மராட்டிய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"மகாராஷ்டிரா உங்களுக்கு தேவை" என்று அவர் கூறினார், தன்னார்வலர்கள் தங்கள் தொடர்பு எண்களை covidyoddha@gmail.com என்ற மின்னஞ்சல் ஐடியில் அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். மேலும், மக்கள் தங்கள் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். மக்கள் வெளியில் செல்லும்போது முககவசங்கள் பயன்படுத்துவதைப் பழக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அம்மாநில முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

.