உ.பியில் ஷிராமிக் ரயிலில் கண்டெடுக்கப்பட்ட புலம் பெயர் தொழிலாளியின் சடலம்!

உயிரிழந்த நபர் மோகன்லால் ஷர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். உத்திர பிரதேச மாநிலம் பஸ்டி மாவட்டத்தினை சொந்த ஊராக கொண்ட இவர், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தினக்கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்திருந்தார்

உ.பியில் ஷிராமிக் ரயிலில் கண்டெடுக்கப்பட்ட புலம் பெயர் தொழிலாளியின் சடலம்!

38 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் ரயிலின் கழிவறையிலிருந்து மீட்கப்பட்டது.

Jhansi, Uttar Pradesh:

உத்தர பிரதேசத்தின் ஜான்சி நகர் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் ஒன்றில் 38 வயது மதிக்கத்தக்க புலம் பெயர் தொழிலாளியின் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. புலம் பெயர் தொழிலாளர்களை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து செல்வதற்காக இயக்கப்பட்ட இந்த ரயிலானது, பயணத்தினை முடித்த பின்னர் கிருமி நாசினி கொண்டு சுத்தம் ஊழியர்கள்  செய்துகொண்டிருந்த போது இந்த சடலம் கழிப்பறையில் சுகாதார  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் மோகன்லால் ஷர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். உத்திர பிரதேச மாநிலம் பஸ்டி மாவட்டத்தினை சொந்த ஊராக கொண்ட இவர், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தினக்கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்திருந்தார். இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக முன் அறிவிப்பின்றி அமல்படுத்தப்பட்ட முழு முடக்க நடவடிக்கையின் காரணமாக வேலையிழந்த கோடிக்கணக்கான தொழிலாளர்களில் இவரும் ஒருவாரா மாறி பின்னர் தன்னுடைய சொந்த மாநிலத்திற்கு பயணித்துள்ளார்.

மோகன்லால் மற்றும் இதர பயணிகள் ஜான்சியை அடைந்தவுடன், கோரக்பூர் செல்வதற்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் ரயில் கோரக்பூருடன் நின்றுவிட்டதா அல்லது பீகார் வரை சென்றதா என்கிற விவரங்கள் தெரியவில்லை. இதன் பின்னர் இதே ரயில் ஜான்சிக்கு திரும்பியதும் ரயில்வே சுகாதார ஊழியர்கள் ரயிலினை சுத்தம் செய்துகொண்டிருந்த போது மோகன்லாலின் சடலத்தினை கண்டுபிடித்துள்ளனர்.

“உயிரிழந்த மோகன்லால் கையில் 28 ஆயிரம் ரூபாய் பணத்தையும், ஒரு சோப்பு மற்றும் சில புத்தகங்களையும் வைத்திருந்தார்.“ என அவரது உறவினரான கண்ணையா ஷர்மா கூறியுள்ளார். “உயிரிழந்த மோகன்லாலின் உடலினை பெற்றுக் கொள்ள காவல்துறை எங்களை அனுமதித்தது” என்றும் கண்ணையா குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் உடலை பிரேத பரிசோதனை மற்றும் கோரோனா பரிசோதனைக்கு பிறகு ஒப்படைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களில் ஏறத்தாழ 20 லட்சம் புலம் பெயர் தொழிலாளர்கள் உத்தர பிரதேசத்திற்கு திரும்பியுள்ளனர். இனி வரும் நாட்களில் சில லட்சம் தொழிலாளர்கள் மாநிலத்திற்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாநிலத்திற்கு தொழிலாளர்கள் திரும்பிய பின்னரும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அரசு கண்காணிப்பில் இருப்பார்கள். இந்த தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்த பின்னர் அவர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து விவாதிக்கப்படும்.

சமீபத்தில் பீகார் ரயில் நிலையத்தில் உயிரிழந்த தனது தாயை எழுப்ப முயற்சிக்கும் வீடியோ வெளியான நிலையில் தற்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. புலம் பெயர் தொழிலாளர்கள் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் வரையில் கையில் பணம் ஏதுமின்றி, உணவு ஏதுமின்றி, குடிநீர் இன்றி கூட பயணிக்கின்றனர்.

முழு முடக்க நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டு 60 நாட்களுக்கு பிறகு உச்ச நீதிமன்றம், புலம் பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னை குறித்து கவலை தெரிவித்திருந்தது. மேலும், மத்திய அரசு புலம் பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதிபடுத்த கொள்கைகளை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தியது.