This Article is From Apr 08, 2020

'வீட்டிலியே இருந்து மக்களுக்கு போர் அடித்து விட்டது; ஆனாலும் வேறு வழியில்லை' :உத்தவ் தாக்கரே

மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற சுகாதார அதிகாரிகள் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.

'வீட்டிலியே இருந்து மக்களுக்கு போர் அடித்து விட்டது; ஆனாலும் வேறு வழியில்லை' :உத்தவ் தாக்கரே

வரும் 11-ம்தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • மகாராஷ்டிர மக்களுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே உரையாற்றியுள்ளார்
  • வீட்டிலேயே இருப்பதால் மக்கள் சலிப்படைந்து விட்டனர் என்கிறார் உத்தவ்
  • ஊரடங்கை தவிர்த்து வேறு வழியில்லை என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்
Mumbai:

ஊரடங்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மக்களுக்கு வீட்டிற்குள்ளேயே இருந்து சலிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், கொரோனாவைக் கட்டுப்படுத்த இதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறியுள்ளார். 

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது. இங்கு மட்டும் 1,018 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 64 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் மாநில மக்களுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

வீட்டிலேயே மக்கள் முடங்கியிருப்பதால் அவர்களுக்கு பல்வேறு விதமான பிரச்னைகள் ஏற்படுகிறது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். மக்கள் சலித்துப் போய் விட்டார்கள். ஆனாலும், கொரோனா வைரஸை நாம் வெல்லவேண்டு என்றால், இதைத் தவிர்த்து வேறு வழியில்லை.

மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற சுகாதார அதிகாரிகள் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் கலந்து கொள்ள வேண்டும். 

மருத்துவத் துறையில் அனுபவம் மிக்க ராணுவ பணியாளர்கள், நர்ஸ்கள் உள்ளிட்டோர் எங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களது சேவை மகாராஷ்டிராவுக்கு இப்போது தேவைப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதற்கிடையே ஊரடங்கு ஏப்ரல் 14-யைத் தாண்டியும் நீட்டிக்க அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

இன்று அனைத்து கட்சி தலைவர்கள் உடன், பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தினார். அப்போது ஏப்ரல் 14-ம்தேதியுடன் ஊரடங்கு நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதேபோன்று பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. வரும் 11-ம்தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அதன்பின்னர் ஊரடங்கு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
.