This Article is From May 21, 2020

பயணிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்: விமானப் பயணங்களுக்கு புதிய கெடுபிடிகள், விதிமுறைகள்!

முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் சுகாதார பிரச்சினைகள் உள்ள பயணிகள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய நபர்கள் விமான பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

பயணிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்: விமானப் பயணங்களுக்கு புதிய கெடுபிடிகள், விதிமுறைகள்!

New Delhi:

உள்நாட்டு விமான போக்குவரத்து வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் தொடங்கும் நிலையில், மூன்றில் ஒரு பங்கு நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று கொரோனா வைரஸ் காலத்தில் விமான போக்குவரத்துகளுக்கான  வழிமுறைகளை வெளியிடும் போது சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.

முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் சுகாதார பிரச்சினைகள் உள்ள பயணிகள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய நபர்கள் விமான பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட புதிய விதிமுறைகள்:

  • பயணிகள் பயண நேரத்திற்கு 2 மணி நேரம் முன்பாகவே விமான நிலையம் வந்தடைய வேண்டும்.

  •  கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

  •  இணைய வழி சென்-இன்க்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது, பைகளுக்கான டேக்குகளையும் ஆன்லைனிலே பெற வேண்டும்.

  • ஒரு பயணி ஒரு கை பைக்கும்,  ஒரு செக்-இன் பேக் மட்டுமே கொண்டு செல்வதற்கு அனுமதி, அதற்கும் ஆன்லைனிலே அனுமதி பெற்று பையில் டேக் மாட்டியிருக்க வேண்டும்.

  • நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள பயணிகளுக்கு அனுமதி கிடையாது. 

  • பயணிகள் ஆரோக்யா சேது செயலி பயன்படுத்த வேண்டும் அல்லது, சுய அறிக்கை படிவம் மூலம் உடல்நல தகவல்களை தரலாம்.

  •  சமூக இடைவெளியை அனைத்து இடங்களிலும் கடைபிடிக்க வேண்டும், அதற்காக குறிப்பிடப்பட்டுள்ள அடையாளங்களை பின்பற்ற வேண்டும்.

விமான நிலையத்தில்:

  • பயணி கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

  •  தெர்மல் சோதனை வழியாக செல்ல வேண்டும்.

  • கவுண்டரில் உடைமைகளை வைத்த பின்பு, அது தொடர்பான ரசீது பயணிகளின் தொலைபேசிக்கு எஸ்எம்ஸ் மூலம் உறுதிப்படுத்தப்படும்.

  •  விமானத்திற்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக பை வைக்கப்பட வேண்டும்.

  •  பாதுகாப்பு ஊழியர்கள் பயணிகளுடன் குறைந்தபட்ச அளவிலே உடல் ரீதியாக தொடர்பு கொள்ள வேண்டும்.

  •  பயணிகள் அனைவரும் தங்களது மொபைல்களில் ஆரோக்யா சேது செயலியை வைத்திருக்க வேண்டும். 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த பயன்பாடு தேவையில்லை.

  •  உடல்ரீதியான தொடர்பை குறைக்க வட்டங்கள், சதுரங்கள் அல்லது தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கும்.

  • பாதுகாப்பு பணியாளர்களுக்கு குறைந்த அளவில் உடல் ரீதியாக தொடர்பு கொள்ள பயிற்சி அளிக்கப்படும்.

  • பயன்படுத்தக்கூடாது என்று குறிப்பிடப்பட்ட நாற்காலியை யாரும் பயன்படுத்தக்கூடாது.

  •  போர்டிங் கேட் அருகே பயணிகளுக்கு முகக்கவசம், பாதுகாப்பு உபகரணம், கிருமி நாசினி உள்ளிட்டவை வழங்கப்படும். 

  • போர்டிங் கேட் அருகே பயணிகள் ஸ்கேன் செய்யப்படுவர், அங்கு தங்களது ஐடி கார்டுகளை ஊழியர்களிடம் காட்ட வேண்டும்.

விமானத்தில்;

  • பயணிகள் வரிசையாக விமானத்திற்கு ஏற வேண்டும்.

  •  பயணிகள் விமானத்தில் கழிவறையை குறைந்த அளவில் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • கழிவறை வாசலில் வரிசையாகக் காத்திருக்க அனுமதி இல்லை. அதேபோல் குழந்தையுடனும் வயதானவருடனும் ஒரேயொருவர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

  • விமானத்தில் எந்த தின்பண்டங்களும், உணவுப்பொருள் விநியோகிக்கப்படாது. பயணிகளும் விமானத்தில் உள்ளே எந்த உணவு வகைகளையும் எடுத்து வருவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். தண்ணீர் பாட்டில்கள் மட்டும் அனைத்து இருக்கையிலும் வைக்கப்படும்.

  • செய்தித்தாள்கள், பத்திரிகைகளை விமானத்திற்குள் எடுத்து வருவதற்கு அனுமதி இல்லை. 

  • பயணிகள் பைகள் வரும் வரை சமூக இடைவெளியுடன் காத்திருக்க வேண்டும். 

.