சீனாவை அச்சுறுத்தும் கொரோனா - 1500 பேர் பலியான சோகம்

வுஹானில் முதன்முதலில் தோன்றிய இந்த கொரோனாவிற்கு இதுவரை குறைந்தது 1,519 பேர் இறந்துள்ளனர் என்று கூறப்படுகிறது

சீனாவை அச்சுறுத்தும் கொரோனா - 1500 பேர் பலியான சோகம்

உரிய பாதுகாப்பு உபகாரணங்களான முகமூடி மற்றும் கையுறைகள் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன

ஹைலைட்ஸ்

  • சீனாவை அச்சுறுத்தும் கொரோனா - 1500 பேர் பலியான சோகம்
  • 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது
  • உரிய பாதுகாப்பு உபகாரணங்களான முகமூடி மற்றும் கையுறைகள் இல்லை
Beijing, China:

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,500 ஆக உயர்ந்துள்ளது. இந்த வாரத்தில் மட்டும் சுமார் 139 பேர் இந்த நோய்யின் பாதிப்பால் இறந்துள்ளனர். COVID-19 என்று அழைக்கப்படும் இந்த நோய்க்கு புதிதாக சுமார் 2,420 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹூபே மாகாண சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. 

டிசம்பர் மாதத்தில் ஹூபேயின் தலைநகரான வுஹானில் முதன்முதலில் தோன்றிய இந்த கொரோனாவிற்கு இதுவரை குறைந்தது 1,519 பேர் இறந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. 66,000-க்கும் அதிகமானோர் இப்போது கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் இந்த நோயினால் ஏற்படும் பெரும்பாலான மரணங்கள் ஹூபே மாகாணத்தில் தான் நிகழ்கின்றன என்று கூறப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி ஹூபே மாகாணத்தில் மட்டும், கடந்த வெள்ளிக்கிழமை வரை சுமார் 4800 புதிய நோயாளிகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளித்து வந்த சுகாதார ஊழியர்கள் சுமார் 1716 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களிடையே பெரும்பாலானோர் ஹூபேயின் தலைநகரான வுஹானில் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பலருக்கு உரிய பாதுகாப்பு உபகாரணங்களான முகமூடி மற்றும் கையுறைகள் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.