சீனாவை தொடரும் சோகம் - கொரோனாவால் 2,233 பேர் பலி

ஆய்வக சோதனைகளால் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களை மட்டுமே கணக்கிடுவதாகவும் சீனா கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ளது

சீனாவை தொடரும் சோகம் - கொரோனாவால் 2,233 பேர் பலி

சீனாவில் சுமார் 75,000 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

ஹைலைட்ஸ்

  • சீனாவை தொடரும் சோகம் - கொரோனாவால் 2,233 பேர் பலி
  • பலியானவர்களின் எண்னிக்கை 2,233 ஆக உயர்ந்துள்ளது
  • 25 உலக நாடுகளுக்கு பரவி உள்ள இந்த கொரோனா
Beijing:

கொரோனா நோய் தொற்றால் சீனாவில் கடந்த வாரத்தில் 115 பேர் இறந்துள்ள நிலையில், அங்கு 
பலியானவர்களின் எண்னிக்கை 2,233 ஆக உயர்ந்துள்ளது. ஹூபே மாகாணத்தில் இருந்து வரும் தகவல்களின்படி அந்த கொரோனா வைரஸ் தோன்றிய இடமாக கருதப்படும் வுஹான் நகரத்தில் தான் அதிக அளவில் மக்கள் இறந்திருப்பதாக கூறப்படுகிறது.

25 உலக நாடுகளுக்கு பரவி உள்ள இந்த கொரோனா காரமனாக சுமார் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சீனாவில் சுமார் 75,000 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹூபே மாகாணத்தில் இருந்து வரும் தகவலின்படி புதிதாக இந்த நோயினால் 411 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 319 பேர் வுஹான் நகரை சேர்ந்தவர்கள் என்றும் மீதம் உள்ள மக்கள் நாட்டின் வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.

கொரோனா வைரஸ் நோயாளிகளை கணக்கிடும் முறையை மீண்டும் மாற்றியுள்ளதாகவும், இப்போது ஆய்வக சோதனைகளால் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களை மட்டுமே கணக்கிடுவதாகவும் சீனா கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. நுரையீரல் தொற்று உள்ளவர்களும், ஆய்வக சோதனையில் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்று கடந்த வாரம் சீனா சுகாதார அமைப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.