This Article is From Mar 16, 2020

கொரோனா அச்சுறுத்தல்: ரூ.2க்கு முகக்கவசம் விற்பனை செய்யும் மருந்தகம்!

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று நோய் காரணமாக முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகளுக்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அவை விலை அதிகமாக வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கொரோனா அச்சுறுத்தல்: ரூ.2க்கு முகக்கவசம் விற்பனை செய்யும் மருந்தகம்!

அடுத்த 100 நாட்களுக்கு முகக்கவசம் என்பது மிகவும் அத்தியாவசியமானது என அரசு உத்தரவிட்டுள்ளது.

Kochi (Kerala):

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுநோய் காரணமாக முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகளுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக அவை விலை அதிகமாக வைத்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கேரளாவில் ஒரு மருந்தகத்தில் முகக்கவசங்கள் ரூ.2க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கேரளாவில் உள்ள அந்த மருந்தகம், அதன் அடக்க விலையிலே முகக்கவசங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதுவரை அந்த கடையில் மட்டும் 5,000 முகக்கவசங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக கொச்சியில் உள்ள அந்த மருந்தகத்தின் இணை உரிமையாளர் நாதீம் கூறுகையில், ரூ.2க்கு நாங்கள் இதுவரை 5,000 முகக்கவசங்களை விற்பனை செய்துள்ளோம். மாணவர்கள், மருத்துவ பணியாளர்களுக்காக நாங்கள் அடக்க விலையில் முகக்கவசங்களை விற்பனை செய்ய முடிவு செய்தோம் என்றார். 

மற்றொரு உரிமையாளரான தஸ்லீம் கூறுகையில், கடந்த 8 வருடங்களாக நாங்கள் முகக்கவசங்களை ரூ.2க்கு தான் விற்பனை செய்து வருகிறோம். ஆனால், தற்போது எல்லா இடங்களிலும் அதன் விலையெற்றம் கண்டுள்ளது. நாங்கள் இந்த முகக்கவசங்களை ரூ.8 முதல் ரூ.10 வரை விலை கொடுத்து வாங்குகிறோம். ஆனால், ரூ.25க்கு விற்பனை செய்கிறோம். 

கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் இந்த சமயத்தில் இது போன்ற பாதுகாப்பு பொருட்களை பதுக்கி வைப்பதை தடுக்கும் வகையில், அடுத்த 100 நாட்களுக்கு முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகளை அத்தியாவசிய பொருளாக அறிவித்துள்ளது. 

அறுவைசிகிச்சை மற்றும் பாதுகாப்பு முகக்கவசங்கள், கிருமிநாசினி மருந்துகள் மற்றும் கையுறைகள் உள்ளிட்டவற்றின் விலைகளை கட்டுப்படுத்த தேசிய மருந்து விலை ஆணையம் (NPPA) அனுமதிக்க மத்திய அரசு பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ஐ செயல்படுத்தியுள்ளது.

கடந்த வாரணம் உலக சுகாதார அமைப்பு கொரோனாவை தொற்று நோயாக அறிவித்தது. உலகளவில், 14,53,374 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 5,400க்கும் அதிகமானோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்தியாவில், இதுவரை 93 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

.