கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை அடுத்த ஓராண்டுக்கு பின்பற்ற வேண்டும்: கேரள அரசு அதிரடி

பொது இடங்கள், நடைபாதைகள், மற்றும் சாலைகளில் எச்சில் துப்புவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்தினை பொறுத்த அளவில், மாநிலங்களுக்குள் பயணிப்பதற்கு இ-பாஸ் தேவையில்லை. ஆனால், பயணிகள் ஜக்ரதா மின் தளத்தில் பயண விவரங்களை பதிவு செய்திட வேண்டும்.

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை அடுத்த ஓராண்டுக்கு பின்பற்ற வேண்டும்: கேரள அரசு அதிரடி

முககவசம் மற்றும் ஆறு அடி சமூக விலகல் எல்லா இடங்களிலும் பொருந்தும் என்று கேரளா தெரிவித்துள்ளது.

Thiruvananthapuram:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, சர்வதேச அளவில் மூன்றாம் இடத்தினை கைப்பற்றும் அளவிற்கு உயர்ந்து வருகின்றது. இந்நிலையில், கேரளாவில் கொரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளை ஓராண்டுக்கு கடைப்பிடிக்குமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

பொது இடங்களில் முககவசங்களை பயன்படுத்துவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. அதே போல வேலை செய்யும் இடங்களிலும் கட்டாயம் முககவசங்களை அணிய வேண்டும் என்றும், ஆறு அடி தனிமனித இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது.

திருமண நிகழ்வுகளில் 50 பேர் வரை பங்கேற்கவும், இறுதி சடங்குகளில் 20 பேர் வரை பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமூக ஒன்றிணைவு நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், தர்ணாக்கள், பொது கூட்டங்கள், அல்லது ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை அதிகாரிகளின் எழுத்துபூர்வ அனுமதியின்றி நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது. அனுமதியளிக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் 10 பேருக்கும் அதிகமானவர்கள் பங்கேற்க அனுமதி கிடையாது.

ஷாப்பிங் மால்கள் போன்ற வணிக வளாகங்களில் 6 அடி தனி மனித இடைவெளியை கணக்கில் கொண்டு அதிகப்பட்சமாக 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அறையின் அளவை கணக்கில் கொண்டு எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

பொது இடங்கள், நடைபாதைகள், மற்றும் சாலைகளில் எச்சில் துப்புவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்தினை பொறுத்த அளவில், மாநிலங்களுக்குள் பயணிப்பதற்கு இ-பாஸ் தேவையில்லை. ஆனால், பயணிகள் ஜக்ரதா மின் தளத்தில் பயண விவரங்களை பதிவு செய்திட வேண்டும்.

தேசிய அளவில் கேரளாவில்தான் முதல் கொரோனா வைரஸ் நோயாளி கண்டறியப்பட்டார். இந்நிலையில் கேரளா அரசு கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிக் கண்டுள்ளது. இதன் காரணமாக கேரள சுகாதாரத்துறை அமைச்சரை ஐ.நா சபை, கொரோனா தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது குறித்து பேச அழைப்பு விடுத்திருந்தது. இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட ஒரே சுகாதார துறை அமைச்சர், கேரள மாநில அமைச்சரான ஷைலஜா என்பது குறிப்பிடத்தக்கது.

Here is the full order by the Health and Family Welfare Department of the Kerala government on COVID-19: