சிவப்பு மண்டலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள்: பினராயி விஜயன்

நேற்றைய தினம் அரபு அமீரகத்தில் இருந்து இரண்டு விமானங்கள் வந்தடைந்தன. அதில், ஒரு விமானம் சவுதி அரேபியாவில் இருந்தும், மற்றொரு விமானம் அபுதாபியில் இருந்தும் கொச்சி வந்தடைந்தது.

சிவப்பு மண்டலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள்: பினராயி விஜயன்

சிவப்பு மண்டலங்களில் இருந்து வருபவர்களுக்கு 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல்

ஹைலைட்ஸ்

  • சிவப்பு மண்டலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாய தனிமைப்படுத்தல்
  • நேற்றைய தினம் அரபு அமீரகத்தில் இருந்து இரண்டு விமானங்கள் வந்தடைந்தன
  • 21 சிறப்பு ரயில்களில் 24,088 புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பியுள்ளனர்.
Thiruvananthapuram (Kerala):

சிவப்பு மண்டலங்களில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் கட்டாயமாகத்  தனிமைப்படுத்தப்படுவார்கள் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். சோதனைச்சாவடிகளில் இருந்தே அவர்கள் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துச்செல்லப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறும்போது, சிவப்பு மண்டலங்களில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள். நேற்றைய தினம் அரபு அமீரகத்தில் இருந்து இரண்டு விமானங்கள் வந்தடைந்தன. அதில், ஒரு விமானம் சவுதி அரேபியாவில் இருந்தும், மற்றொரு விமானம் அபுதாபியில் இருந்து கொச்சி வந்தடைந்தது. அதில், 49 கர்ப்பிணிகள், 4 கைக்குழந்தைகள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 15 பேர், உட்பட 181 பேர் வந்தடைந்தனர். இதில், 5 பேர் காலமச்சேரி மருத்துவக்கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 182 பேர் வந்தனர் என்று அவர் கூறினார். 

தொடர்ந்து, இன்று ரியாத்தில் இருந்து கோழிக்கோடுக்கு 149 பேர் சிறப்பு விமானம் மூலம் வந்துள்ளனர். அவர்களில் 10 பேர் கர்நாடகா மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதில் 84 கர்ப்பிணிகளும், 22 குழந்தைகளும் வந்துள்ளனர். 5 அவசர மருத்துவம் தேவைப்படுபவர்களும் வந்துள்ளனர். 

தோகாவில் இருந்து அடுத்த விமானம் நாளை திருவனந்தபுரம் வந்தடையும் என்று தெரிகிறது. அதில், திருவனந்தபுரம், கன்னியாகுமரி, கொல்லம், ஆலப்புழா, பதானமதிட்டா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் வருவதாக பினராயி கூறினார். 

ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் சிக்கியுள்ளதாக 86,679 மலையாளிகள் அனுமதி சீட்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதில், (23.71 சதவீதம்) 37,891 பேர் சிவப்பு மண்டலங்களில் உள்ளவர்கள். இதுவரை 45,814 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், 19,476 பேர் சிவப்பு மண்டலங்களை சேர்ந்தவர்கள். 

இன்றைய தேதி வரை 16,385 பேர் கேரளா வந்தடைந்துள்ளனர். இதில், 8,912 பேர் சிவப்பு மண்டலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். நேற்று வந்தவர்களில் 3,216 பேர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். 

முன்னதாகவே சிவப்பு மண்டலங்களில் இருந்து வந்தவர்களும் கண்டறியப்பட்டு அவர்களும், அரசு தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.  இதில், 10 வயதுக்கு குறைவான குழந்தைகள், 75 வயதை தாண்டிய மூத்த குடிமக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் வீட்டிலே தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. 

மே.7ம் தேதி வரை கேரளாவில் இருந்து 21 சிறப்பு ரயில்களில் 24,088 புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றுள்ளனர்.