This Article is From Jul 20, 2020

கொரோனா பரவல் அதிகரிப்பு: திருவனந்தபுரத்தில் முழு ஊரடங்கு அமல்!

கேரளாவிவல் 12,480 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 7,067 பேர் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர், 5,371 பேர் வரை குணமடைந்துள்ளனர்.

கொரோனா பரவல் அதிகரிப்பு: திருவனந்தபுரத்தில் முழு ஊரடங்கு அமல்!

கொரோனா பரவல் அதிகரிப்பு: திருவனந்தபுரத்தில் முழு ஊரடங்கு அமல்!

கொரோனா பரவல் காரணமாக திருவனந்தபுரத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 

இந்த முழு ஊரடங்கு உத்தரவானது நேற்றைய தினம் முதல் வரும் ஜூலை 28ம் தேதி திருவனந்தபுரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, பேரிடர் ஆணையம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், கடலோரப் பகுதிகளின் சிக்கலான கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள திருவனந்தபுரம் மாநகராட்சி வார்டுகளுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த முழு ஊரடங்கின் போது, பொது கணக்காளர் அலுவலகம் 30 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் என்றும், உணவுக் கடைகள், மருந்து கடைகள் மற்றும் அவை சார்ந்த உற்பத்தி ஆலைகள் இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், கட்டிட பணிகள் நடைபெறும் இடங்களில் அந்த இடங்களிலே தங்கி பணிபுரிபவர்கள் பணியை மேற்கொள்ளலாம் என்றும், கட்டிட பணி நடக்கும் இடங்களை தவிர்த்து வேறு இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் 12,480 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 7,067 பேர் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர், 5,371 பேர் வரை குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 
 

.