This Article is From Mar 30, 2020

கொரோனாவால் திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் நடைபெற்ற திருமணம்!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் நடைபெற்ற திருமணம்!!

கட்டுப்பாடுகளுடன் நடந்த திருமணத்தில் குறைந்த எண்ணிக்கையில் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

ஹைலைட்ஸ்

  • கொரோனா பரவலால் திருமண நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
  • மக்கள் கூடுவதை தடுக்க வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன
  • கோயில் மூடப்பட்டதால் திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் திருமணம் நடந்தது
Madurai:

கொரோனா பாதிப்பு காரணமாக மதுரை திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் இளம் ஜோடி திருமணம் செய்து கொண்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதை தடுக்க வழிபாட்டுத் தலங்கள், வணிக மையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மூடப்பட்டுள்ளன. திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வாசலில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் குறைந்த எண்ணிக்கையில் உறவினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் நிலையில் திருமணங்களை முடிந்தவரை ஒத்தி வைக்குமாறும், திருமணம் நடத்துவதாக இருந்தால் அதில் குறைந்த எண்ணிக்கையில் உறவினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

நாடு முழுவதும் கொரோனாவால் 1,071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 99 பேர் அடங்குவர். 

.