அறிகுறியே இல்லாமல் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு!! மருத்துவர்கள் அதிர்ச்சி!

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,421 ஆக உள்ளது. கேரளாவில் மட்டும் 327 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அறிகுறியே இல்லாமல் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு!! மருத்துவர்கள் அதிர்ச்சி!

கேரளாவில் 58 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • பாதிப்பு அறிகுறியே இல்லாமல் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
  • 60 வயது ஆண், 19 வயது மாணவி ஆகியோருக்கு 14 நாட்களாக எந்த அறிகுறியும் இல்லை
  • தற்போது இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
Pathanamthitta, Kerala:

காய்ச்சல், இருமல், மூச்சுத் தவிப்பு போன்ற எந்தவொரு அறிகுறியே இல்லாமல், கேரளாவைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பத்தனம் திட்டாவில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

இங்கு துபாயில் இருந்து வந்த 60 வயது ஆணுக்கும், டெல்லியில் இருந்து வந்த 19 வயது மாணவிக்கும் அறிகுறியே இல்லாமல் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ஓர் அபாயச் சங்கு என்று பத்தனம் திட்டா மாவட்ட ஆட்சியர் நூஹ் கூறியுள்ளார். இவ்வாறு அறிகுறியே இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுக்கும் அதனைப் பரப்பக்கூடும் என அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

அந்த 60 வயது ஆண் துபாயில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மார்ச் 19-ம்தேதி வந்துள்ளார். அங்கிருந்து சாலை மார்க்கமாக தனது சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார். பின்னர் அவரை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். 

இதேபோன்று மாணவி டெல்லியில் இருந்து மார்ச் 15-ம்தேதி கிளம்பி, மார்ச் 17-ம்தேதி எர்ணாகுளத்திற்கு வந்துள்ளார். பேருந்து மூலமாக அங்கிருந்து தனது சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார். இதையடுத்து வெளி மாநிலத்திலிருந்து வந்தவர் என்ற அடிப்படையில் அவரையும் அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நாட்களில் இந்த இருவருக்கும் எந்த அறிகுறியும் ஏற்படவில்லை. இந்த நிலையில் இருவருக்கும் தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவத்தை தொடர்ந்து, கேரளாவில் கொரோனா பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,421 ஆக உள்ளது. கேரளாவில் மட்டும் 327 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.