This Article is From Apr 05, 2020

பிரதமரின் கோரிக்கையை ஏற்று இன்று இரவு மின் விளக்குகளை அணைக்க தயாராகும் மக்கள்

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு செயற்கையாக ஏற்படுத்தப்படும் மின்வெட்டையொட்டி ஏற்படும் பிரச்சினைகளைச் சரி செய்வதற்கு தங்கள் ஊழியர்களைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு பல மாநிலங்களை மத்திய மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

கேரளாவில் பிரதமரின் கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் அவரது ஆதரவாளர்கள்

ஹைலைட்ஸ்

  • In a video message on Friday, PM Modi made an appeal to the nation
  • "On April 5, Sunday, at 9 pm, I want 9 minutes from all of you," he said
  • "No call to switch off street lights, computers or TV": Government
New Delhi:

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். இந்த நிலையில் பல நாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு முடக்க நடவடிக்கையை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவும் முழு முடக்க நடவடிக்கை அமல்படுத்தியுள்ளது. தற்போது இந்த நடவடிக்கை அமலாக்கப்பட்டு 12 வது நாளில் இந்தியா இருக்கின்றது. சமீபத்தில் பிரதமர் கொரோனா என்கிற இருளினை அகற்ற அனைவரும் ஏப்ரல் 5 அன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் தங்கள் வீடுகளில் உள்ள மின் விளக்குகளை அணைத்துவிட்டு, அகல் விளக்குகள், மெழுகுவர்த்தி, அல்லது டார்ச் லைட்டுகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000க்கும் அதிகமாக அதிகரித்திருக்கின்றது. 86 பேர் தொற்றால் மரணமடைந்திருக்கிறார்கள் இந்த நிலையில் பிரதமரின் இந்த அறிவிப்பானது எதிர்க் கட்சிகளிடையே பெரும் விமர்சனத்தினை கிளப்பியிருந்தது.

இந்த முழு முடக்க நடவடிக்கையில் தேசத்தின் 130 கோடி மக்களும் தனிமையில் இல்லை என்றும், அனைவரும் ஒன்றாக இருக்கின்றோம்,  இந்தியாவின் வல்லரசு என்பது ஒவ்வொரு குடிமகனிடமும் உள்ளது என பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

This morning, PM Modi tweeted: "#9pm9minute". 

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கோடிக்கணக்கான மின் விளக்குகள் அணைக்கப்படும் பொழுது மின் தேக்கம் மற்றும் திடீரென மின் நுகர்வு அதிகரிப்பு என இரு சூழ்நிலைகளை மின்வாரியம் எதிர்கொள்ளும். இதனால், பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மாநில மின்வாரியங்கள் தங்கள் கவலையினை தெரிவித்திருந்தன. இந்த நிலையில் மத்திய மின்சார வாரியம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், “வீடுகளில் விளக்குகளை மட்டும் அணைக்கலாம் என்றும், இதர மின்கருவிகளான தொலைக்காட்சி, குளிர்சாதனம், மின்விசிறி என வேறு எதையும் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. மேலும், மருத்துவமனைகளில் உள்ள விளக்குகள் மற்றும் பொது பயன்பாடுகள், நகராட்சி சேவைகள், அலுவலகங்கள், காவல் நிலையங்கள், உற்பத்தி வசதிகள் போன்ற அனைத்து அத்தியாவசிய சேவைகளும் தொடர்ந்து இயங்கும் என்றும் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு செயற்கையாக ஏற்படுத்தப்படும் மின்வெட்டையொட்டி ஏற்படும் பிரச்சினைகளைச் சரி செய்வதற்கு தங்கள் ஊழியர்களைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு பல மாநிலங்களை மத்திய மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

பிரதமரின் இந்த அறிவிப்பினை காங்கிரஸின் ராகுல் காந்தி, “கொரோனா தொற்றினை எதிர்கொள்ள வெறுமென கைத்தட்டல்களும், தீப விளக்குகளும் மட்டுமே போதுமானது அல்ல.” என விமர்சித்திருக்கிறார். இவரைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி சஷி தரூர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ரா ஆகியோரும் தங்கள் விமர்சனத்தினை பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஆந்திர முதல்வர், தேசிய ஒற்றுமையை வெளிப்படுத்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்கினை அணைத்து, ஆந்திர மக்கள் அனைவரும் நம்பிக்கையின் விளக்கினை ஏற்றுமாறு தான் கேட்டுக்கொள்வதாக ஜெகன்மோகன் ரெட்டி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், எல்லையற்ற ஒளியின் சக்தியால் நம்மீது வீசும் இருளைத் தூக்கி எறியுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த பிரதமர். இந்த ஆதரவு ஒற்றுமையைப் பல படுத்த உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர் உட்பட பலர் பிரதமரின் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து ட்விட் செய்திருந்தனர். பிரதமர் அதனை பகிர்ந்திருந்தார். முன்னதாக பிரதமர், தொற்றினை எதிர்கொள்ள நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கினை அறிவித்திருந்தார். அதற்கு அமித்தாப் பச்சன் போன்ற பல பிரபலங்கள் ஆதரவினை தெரிவித்திருந்தனர். 

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
.