முன்னெப்போதும் இல்லாத அளவில் நாடு முழுவதும் ஒரே நாளில் 9,971 பேருக்கு கொரோனா!

அமெரிக்காவின் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உலக நாடுகள் வரிசையில் இந்தியா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முன்னதாக ஸ்பெயின் ஐந்தாவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னெப்போதும் இல்லாத அளவில் நாடு முழுவதும் ஒரே நாளில் 9,971 பேருக்கு கொரோனா!
New Delhi:

முன்னெப்போதும் இல்லாத அளவாக நாடு முழுவதும் ஒரே நாளில் 9,971 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 287 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 6,929 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,46,628 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,20,406 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை 1,19,293 பேர் குணமடைந்துள்ளனர். 
 

  • அமெரிக்காவின் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உலக நாடுகள் வரிசையில் இந்தியா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முன்னதாக ஸ்பெயின் ஐந்தாவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
  • நாடு முழுவதும் தொற்று பரவல் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகின்ற நிலையில், அடுத்த மூன்று மாத காலத்திற்கு இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என எய்ம்ஸ் நிறுவன இயக்குநர் ரன்தீப் குலேரியா குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போது கொரோனா தொற்று தேசிய அளவில் சமூக பரவுதல் அடையவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
  • அதிக அளவு தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் வரிசையில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,739 பேர் மாநிலம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 82,968  ஆக அதிகரித்துள்ளது. “மீண்டும் தொடங்கும் திட்டம்“ இம்மாநிலத்தில் நாளை முதல் அமல்படுத்தப் போவதாக  மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலமாக பல தளர்வுகள் அளிக்கப்படும். ஆனால், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் ஹோட்டல்கள் போன்றவை நாளை திறப்பதற்கு அனுமதியளிக்கப்படவில்ல.
  • ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் சனிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 749 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,09,791 ஆக அதிகரித்துள்ளது. 19 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 68,91,219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.