This Article is From Aug 11, 2020

தமிழகத்தில் கொரோனா தொற்று நிலவரம்: சென்னையை அடுத்து எந்த மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்?

இன்று மிகக் குறைவாக நீலகிரி மாவட்டத்தில் 5 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நிலவரம்: சென்னையை அடுத்து எந்த மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்?

இன்று சென்னையை அடுத்து அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 388 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • இன்றும் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது
  • அதே நேரத்தில் சென்னையில் ஒருநாள் பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது
  • தமிழக வட மாவட்டங்களில் அதிக கொரோனா பாதிப்பு உள்ளது

தமிழகத்தில் இன்று 5,834 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 986 பேர். ஒட்டுமொத்த அளவில் 3,08,649 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 6,005 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 2,50,680 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 52,810 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இன்று மட்டும் 118 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 5,159 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

இன்று சென்னையை அடுத்து அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 388 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 362 பேருக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 333 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 330 பேருக்கும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 324 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. 

இன்று மிகக் குறைவாக நீலகிரி மாவட்டத்தில் 5 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் 8 பேருக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 10 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

ஆக்டிவ் கேஸ்களை பொறுத்தவரை நீலகிரியில் மிகக் குறைவாக 115 பேரும், தர்மபுரியில் 139 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 239 பேரும், நாமக்கல் மாவட்டத்தில் 294 பேரும் சிகிச்சை எடுத்து வருகிறார்கள். 

.