This Article is From Aug 07, 2020

தமிழகத்தில் கொரோனா தொற்று: இன்றைய பாதிப்பு எண்ணிக்கை 5,880; டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 6,488!

தமிழகத்தைப் பொறுத்தவரை தர்மபுரியில் மிகக் குறைவாக 85 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. அதைத் தொடர்ந்து நீலகிரியில் 154 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. 

தமிழகத்தில் கொரோனா தொற்று: இன்றைய பாதிப்பு எண்ணிக்கை 5,880; டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 6,488!

இன்று சென்னையை அடுத்து அதிகபட்சமாக திருவள்ளூரில் 388 பேருக்கும், தேனியில் 351 பேருக்கும், செங்கல்பட்டில் 319  பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்
  • தமிழகத்தில் தினமும் 5,000க்கும் அதிகமான கொரோனா கேஸ்கள் பதிவாகின்றன
  • தமிழகத்தில் டிஸ்சார்ஜ் விகிதமும் அதிகமாக உள்ளது

தமிழகத்தில் இன்று 5,880 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 984 பேர். ஒட்டுமொத்த அளவில் 2,85,024 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 6,488 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 2,27,575 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 52,759 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இன்று மட்டும் 119 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 4,690 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

இன்று சென்னையை அடுத்து அதிகபட்சமாக திருவள்ளூரில் 388 பேருக்கும், தேனியில் 351 பேருக்கும், செங்கல்பட்டில் 319  பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல ராணிப்பேட்டையில் 253 பேருக்கும், திருவண்ணாமலையில் 252 பேருக்கும் தொற்று இருப்பது சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தைப் பொறுத்தவரை தர்மபுரியில் மிகக் குறைவாக 85 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. அதைத் தொடர்ந்து நீலகிரியில் 154 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. 

.