2 மணி நேரமாக சாலையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா பாதித்தவர் சடலம்!

இதுதொடர்பான வீடியோவில், உயிரிழந்த அந்த 55 வயது நபரின் சடலம் அவரது வீட்டிற்கு வெளியில் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. சடலத்திற்கு அருகில் அவரது உறவினர்கள் நிற்கின்றனர்.

2 மணி நேரமாக சாலையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா பாதித்தவர் சடலம்!

2 மணி நேரமாக சாலையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா பாதித்தவர் சடலம்!

ஹைலைட்ஸ்

  • 2 மணி நேரமாக சாலையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா பாதித்தவர் சடலம்!
  • 2 மணி நேரம் தாமதத்திற்குப் பிறகு ஆம்புலன்ஸ் அந்த இடத்திற்கு வந்துள்ளது.
  • இதற்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர்
Bengaluru:

கொரோனா பாதிக்கப்பட்டவர் ஒருவர் வீட்டிலையே உயிரிழந்ததை தொடர்ந்து, 2 மணி நேரமாக அந்த குடும்பத்தினர் அம்புலான்ஸூக்கு காத்திருந்துள்ளனர். 

இதுதொடர்பான வீடியோவில், உயிரிழந்த அந்த 55 வயது நபரின் சடலம் அவரது வீட்டிற்கு வெளியில் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. சடலத்திற்கு அருகில் அவரது உறவினர்கள் நிற்கின்றனர். 

அந்த நபருக்கு சுவாசக்கோளாறு இருந்ததாகவும் அதற்கு அவர் வீட்டிலே சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார். 

இதனிடையே, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது நிலைமை மோசமடைந்தால், அவரது மனைவி மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்ஸ் கோரியுள்ளார். 

ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரை ஒரு ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்து அவரை வீட்டை விட்டு வெளியே அழைத்து வந்தனர். எனினும், அவர் சாலையில் சரிந்து விழுந்தார். 

பின்னர் இரண்டு மணி நேரம் தாமதத்திற்குப் பிறகு ஆம்புலன்ஸ் அந்த இடத்திற்கு வந்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக கொரோனா வைரஸ் பொறுப்பு அமைச்சர் ஆர்.அஷோக் கூறும்போது, இதற்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 

தொடர்ந்து, பெங்களூர் குடிமை அமைப்பு ஆணையர் அனில் குமார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும், சுகாதார சேவைகளில் பெரும் அழுத்தம் இருந்தாலும், எதிர்காலத்தில் இது மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்வோம் என்று அவர் கூறினார். 

பெங்களூரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது பல மடங்கு அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு புதிதாக 994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அங்கு நகரத்தில் இதுவரை 7,173 பேர் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 106 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 6,297 பேர் தொடர்ந்து, சிகிச்சை எடுத்து வருகின்றனர். 

கர்நாடகாவில், இதுவரை 19,710 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 293 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.