கொரோனா அச்சுறுத்தல்: கோ ஏர் நிறுவனம் சம்பளம் இல்லாமல், ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கியுள்ளது!

பட்ஜெட் கேரியர் கோ ஏர், சர்வதேச நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாகவும், அதன் ஊழியர்களுக்குச் சுழற்சி முறையில் ஊதியம் இல்லாமல் விடுப்பு வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. 

கொரோனா அச்சுறுத்தல்: கோ ஏர் நிறுவனம் சம்பளம் இல்லாமல், ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கியுள்ளது!

மார்ச் 17ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை அனைத்து சர்வதேச நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்துவதாக கேரியர் தெரிவித்தது.

Mumbai:

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக விமானப் பயணம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், பட்ஜெட் கேரியர் கோ ஏர், சர்வதேச நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாகவும், அதன் ஊழியர்களுக்குச் சுழற்சி முறையில் ஊதியம் இல்லாமல் விடுப்பு வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. 

பிடிஐ செய்தி நிறுவனத்திடம், விமானப் பயணம் இதுவரை சந்திக்காத சரிவை இப்போது பெற்றுள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த மோசமான நிலை காரணமாக, மார்ச் 17ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை அனைத்து சர்வதேச நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்துவதாக கேரியர் தெரிவித்தது.

“கோ ஏர், சம்பளம் இல்லாமல் ஒரு குறுகிய கால மற்றும் தற்காலிக சுழற்சி விடுப்பையும் தொடங்கியுள்ளது. ஆனால், வணிக தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக எங்கள் ஊழியர்கள் பணியிடத்திலிருந்து விலகி இருக்கிறார்கள்,” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.