சென்னையில் கொரோனா தொற்று: 87 சதவீதமாக கூடிய டிஸ்சார்ஜ் விகிதம் - விரிவான தகவல்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 997 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் கொரோனா தொற்று: 87 சதவீதமாக கூடிய டிஸ்சார்ஜ் விகிதம் - விரிவான தகவல்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 90,966 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 87 சதவீத மீட்பு விகிம் ஆகும்.

ஹைலைட்ஸ்

  • சென்னையில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது
  • நகரத்தில் கொரோனா டிஸ்சார்ஜ் விகிதமும் அதிகரித்து வருகிறது
  • தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது

தமிழகத்தில் நேற்று 5,175 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,044 பேர். ஒட்டுமொத்த அளவில் 2,73,460 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 6,031 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 2,14,815 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 54,184 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 112 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 4,461 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (06.08.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 404

மணலி - 87

மாதவரம் - 582

தண்டையார்பேட்டை - 638

ராயபுரம் - 768

திரு.வி.க நகர் - 884

அம்பத்தூர் - 1,462

அண்ணா நகர் - 1,308

தேனாம்பேட்டை - 794

கோடம்பாக்கம் - 1,331

வளசரவாக்கம் - 878

ஆலந்தூர் - 584

 அடையாறு - 945

பெருங்குடி - 488

சோழிங்கநல்லூர் - 469

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 189

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 90,966 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 87 சதவீத மீட்பு விகிம் ஆகும். 2,227 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 11,811 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 997 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 1,462 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்திலும் மற்றும் அண்ணா நகர் மண்டலத்திலும் முறையே 1,331 மற்றும் 1,308 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 87 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.