This Article is From Apr 09, 2020

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் தவறுதலாக டிஸ்சார்ஜ்!

Tamil Nadu coronavirus: கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவுகள் வந்ததால், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மேலும் 3 பேரும் மீண்டும் அனுமதிக்கப்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் தவறுதலாக டிஸ்சார்ஜ்!

Coronavirus:சென்னையில் மக்கள் நடந்து செல்லும் பாதையில் சமூக விலகலை கடைபிடிக்க வட்டங்கள் போடப்பட்டுள்ளன.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர் தவறுதலாக டிஸ்சார்ஜ்!
  • அந்த நபர் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து மாயம்
  • சோதனையில் நெகட்டிவ் என முடிவுகள் வந்ததால், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்
Chennai:

தமிழகத்தில் கெரோனா பாதிக்கப்பட்ட டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தவறுதலாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த நபர் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து மாயமாகியுள்ளார். தொடர்ந்து, அவரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவுகள் வந்ததால், அந்த நபர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, அவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மேலும் 3 பேரும் மீண்டும் அனுமதிக்கப்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

எனினும், மற்ற மூவரும் தனிமைப்படுத்தல் வார்டில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், டெல்லியை சேர்ந்தவர் மற்றும் தொடர்ந்து, மாயமாகியுள்ளார். 

தவறுதலாக அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், அவரால் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ச்சியான, பரிசோதனைகள் அவருக்கு வேறுபட்ட முடிவுகளை காட்டியதால் குழப்பத்திற்கு வழிவகுத்ததா அல்லது தவறுதலாக அவர் விடுவிக்கப்பட்டாரா என்று தங்களுக்கு தெரியவில்லை என விழுப்புரம் போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்து, மாயமான நபரை கண்டறிய அவரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். 

முன்னதாக, இந்த வாரம் சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், உயிரிழந்தவர் ஒருவரின் சடலத்தை கொரோனா பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாகவே குடும்பத்தினரிடம் ஒப்படைத்தாக குற்றம்சாட்டப்பட்டது. தொடர்ந்து, சோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து, அந்த நபரின் இறுதிச்சடங்கில் அபாயத்தை அறியாமல் 50 பேர் பங்கேற்றுள்ளனர். இதனால், அவர்களுக்கும் கொரோனா பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதையடுத்து, அந்த குடும்பத்தினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைக் கேட்டு நடைபெறுமாறு தெரிவிக்கப்பட்டது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது. இதில், 679 பேர் டெல்லி மதக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஆவார்கள். தொடர்ந்து, கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் 5 பேரின் உடல்நிலை மட்டும்தான் சற்று கவலைக்கிடமாக உள்ளது. மற்றவர்கள் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும், மூதாட்டி ஒருவர் உட்பட 21 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்ததால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

.