தொடர்ந்து பரவும் கொரோனா - சீனாவில் 1600 பேர் பலி

மேலும் இந்த நோய் தொற்றினால் சுமார் 68,000 பேர் சீனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹூபே மாகாணத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து பரவும் கொரோனா - சீனாவில் 1600 பேர் பலி

பரவும் இந்த நோயை தடுக்க சீன அரசு பலவித தடைகளை விதித்து வருகின்றது.

ஹைலைட்ஸ்

  • பரவும் இந்த நோயை தடுக்க சீன அரசு பலவித தடைகளை விதித்து வருகின்றது.
  • தொடர்ந்து பரவும் கொரோனா - சீனாவில் 1600 பேர் பலி
  • 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
Beijing, China:

பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் இதுவரை 1600 பேர் இறந்துள்ளனர். மேலும் இந்த நோய் தொற்றினால் சுமார் 68,000 பேர் சீனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹூபே மாகாணத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பரவும் இந்த நோயை தடுக்க சீன அரசு பலவித தடைகளை விதித்து வருகின்றது. சீன அதிபர் ஜி ஜின்பிங் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதே நேரத்தில் வெளிநாட்டில் இருந்து பெய்ஜிங் தலைநகருக்குத் திரும்பும் மக்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ளார். 

80 வயதான சீன சுற்றுலாப் பயணி ஒருவர், இந்த கொரோனா வைரஸால் இறந்துள்ளார் என்று பிரெஞ்சு சுகாதார அமைச்சர் ஆக்னஸ் புசின் கடந்த சனிக்கிழமை அன்று தெரிவித்தார். மேலும் சீனாவை தவிர, பிலிப்பைன்ஸ், ஹாங்காங் மற்றும் ஜப்பானில் மூன்று பேர் இந்த கொரோனா நோயினால் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், சீனாவின் ஹூபே மாகாணத்தில் புதிதாக 139 பேர் இந்த நோய் தொற்றால் இறந்த நிலையில் அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 1,662 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சீனாவில் கடந்த மாதம் சந்திர புத்தாண்டு கொண்டாடப்பட்டதால் அந்த விடுமுறைக்காக மில்லியன் கணக்கானவர்கள் நாடு முழுவதும் பயணம் செய்துள்ளனர். அவ்வாறு பயணம் செய்தபோது இந்த வைரஸ் மேலும் பரவியதாக கூறப்படுகிறது. தற்போது சீனாவின் சில நகரங்களில் மக்கள் கடந்த இரண்டு வாரங்களாக மீண்டும் மெதுவாக வேலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர், ஆனால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன நாட்டு அதிகாரிகள் ஹூபே மாகாணம் மற்றும் அதன் தலைநகர் வுஹானில் சுமார் 56 மில்லியன் மக்களை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். நாட்டின் பிற மாநிலங்களுக்கு இந்த கொரோனா பரவாமல் இருக்க இது ஒன்றே வழி என்றும் கருதப்படுகிறது. கடந்த சனிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று போசிய சீனாவின் அதிபர். இதுபோன்ற நெருக்கடியான நேரங்களின்போது கண்டிப்பாக போலீஸ் சக்தியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்த நோய் தொற்று குறித்து சீன உயர்மட்ட விஞ்ஞானி ஒருவர் பேசுகையில், இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து புதிதாக இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்துவருவதால், இந்த மாத இறுதிக்குள் இந்த தொற்று நோய் உச்சம் அடையக்கூடும் என்று  கூறியுள்ளார். மேலும் இந்த நோயின் பாதை குறித்து ஏதேனும் முடிவுகளை எடுப்பதற்கு இது சரியான நேரம் இல்லை என்று உலக சுகாதார அமைப்பான WHO எச்சரித்துள்ளது.