தமிழகத்தில் 5.19 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,652 பேருக்கு தொற்று!!

இன்று மட்டும் 5,768 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,64,668 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் 5.19 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,652 பேருக்கு தொற்று!!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5.19 லட்சத்தினை கடந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்ட 84,567 பேரின் மாதிரிகளில் 5,652 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 61,33,399 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இன்று 57 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 8,559 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,652 பேரில் 3,489 பேர் ஆண்களும், 2,163 பேர் பெண்களாவார்கள். இதுவரை 3,13,327 ஆண்களும், 2,06,504 பெண்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

தமிழகம் முழுவதும் தற்போது பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையானது 170 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று மட்டும் 5,768 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,64,668 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது 46,633 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்