தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக ஒரே நாளில் 112 பேர் உயிரிழப்பு! 5,175 பேருக்கு கொரோனா!!

சென்னையை பொறுத்த அளவில் 33வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,175 பேரில் 1,044 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக ஒரே நாளில் 112 பேர் உயிரிழப்பு! 5,175 பேருக்கு கொரோனா!!

ஹைலைட்ஸ்

  • இன்று கொரோனா எண்ணிக்கை 5,175
  • ஒட்டு மொத்த பாதிப்பு 2,73,460 ஆக அதிகரித்துள்ளது
  • இன்று மட்டும் 6,031 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 2.73 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 61,166 மாதிரிகளில் 5,175 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 7வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக பரிசோதனை எண்ணிக்கையும் குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 2,73,460 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 6,031 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,14,815 ஆக அதிகரித்துள்ளது. இன்று 112 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு  தினத்தைத் தொடர்ந்து இன்றும் 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. ஒட்டு மொத்த உயிரிழப்பு 4,461 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 54,184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் 33வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,175 பேரில் 1,044 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,05,004 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,227 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 25 பேர் உயிரிழந்துள்ளனர்.