தமிழகத்தில் 1.6 லட்சத்தை கடந்தது கொரோனா! இன்று 4,549 பேருக்கு பாதிப்பு!!

சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 82,128 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 1,341 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 1.6 லட்சத்தை கடந்தது கொரோனா! இன்று 4,549 பேருக்கு பாதிப்பு!!

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் கொரோனா 1.56 லட்சத்தினை கடந்துள்ளது
  • இன்று 4,549 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு
  • இன்று மட்டும் 5,106 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 1.56 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 44,186 மாதிரிகளில் 4,549 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 1,56,369 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 5,106 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 1,07,416 ஆக அதிகரித்துள்ளது. இன்று 69 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு 2,236 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,714 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் 13வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 4,549 பேரில் 1,157 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 82,128 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 1,341 பேர் உயிரிழந்துள்ளனர்.