This Article is From Apr 20, 2020

“இந்தியா போன்ற நாடுகளைவிட அமெரிக்கா அதிக அளவில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது“: ட்ரம்ப்

கொரோனா தொற்று பாதிப்புகள் கணக்கீட்டின்படி 1 லட்சம் புள்ளிகள் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது நாங்கள் 60,000 என்கிற இடத்தில்தான் இருக்கின்றோம். இது எதிர்பார்க்கப்பட்ட பாதிப்புகளை விட 40,000 குறைவு.

“இந்தியா போன்ற நாடுகளைவிட அமெரிக்கா அதிக அளவில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது“: ட்ரம்ப்

அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கப்போகிறது என்று டொனால்ட் டிரம்ப் மக்களுக்கு உறுதியளித்தார்.

Washington:

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் உலக வல்லரசு என சொல்லப்படும் அமெரிக்கா  தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. 7.6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 40,000 பேர் இதுவரை அந்நாட்டில் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நாடு முழுவதும் 4.18 மில்லியன் மக்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், இது மற்ற உலக நாடுகளைவிட அதிக எண்ணிக்கை என்றும் அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

"பிரான்ஸ், ஐக்கிய ராஜ்ஜியம்(UK), தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், இந்தியா, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, சுவீடன் மற்றும் கனடா ஆகிய நாடுகளை விட அதிகமான சோதனைகளை நாங்கள் செய்துள்ளோம்" என ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் கொரோனா தொற்று மையமாகவும், தொற்றால் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட பகுதியாகவும் இருப்பது நியூயார்க் மாகாணமாகும். இதுவரை இங்கு 2,42,000 மக்கள் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 17,600க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் தற்போது கடந்த எட்டு நாட்களில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை இப்பகுதியில் குறைந்து வருகிறது.

இது நல்ல முன்னேற்றம் என ட்ரம்ப் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், தொடக்கத்தில் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு முடக்க (LOCKDOWN) நடவடிக்கையை முன்னெடுக்க தவறியதன் விளைவாக மிக மோசமான பாதிப்புகளை அவை சந்தித்தன.

அமெரிக்காவில் முழு முடக்க நடவடிக்கை மற்றும் பரிசோதனைகளை விரிவு படுத்தியது போன்றவற்றை நாங்கள் மேற்கொள்ளாவிடில் இதைவிட பெரிய அளவில் பாதிப்புகளை சந்தித்திருப்போம் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.

கொரோனா தொற்று பாதிப்புகள் கணக்கீட்டின்படி 1 லட்சம் புள்ளிகள் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது நாங்கள் 60,000 என்கிற இடத்தில்தான் இருக்கின்றோம். இது எதிர்பார்க்கப்பட்ட பாதிப்புகளை விட 40,000 குறைவு. தொற்று நோயை எதிர் கொள்வதற்கு சுகாதார அமைப்பு போரில் ஈடுபடுவதைப்போல தற்போது ஈடுபட்டுவருகிறது. நாங்கள் மிகப்பெரிய பணியினை செய்து வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சியாட்டில், டெட்ராய்ட், நியூ ஆர்லியன்ஸ், இண்டியானாபோலிஸ் மற்றும் ஹூஸ்டன் மெட்ரோ பகுதிகளில் தொற்று பரவல் எண்ணிக்கை குறைந்துள்ளதால் அரசின் முயற்சிகளுக்கு பலன் உருவாகியுள்ளது. நாடு பாதுகாப்பாக இருக்கும். நாம் எதையும் அடைக்கப்போவதில்லை. ஆனால், தொற்று பரவலை தடுக்க வீரியத்துடன் செயல்படுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பெரும்பாலும் அனைத்து பகுதிகளும் தொற்று தடுப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆளுநர்கள் முழு ஒத்துழைப்போடு பங்காற்றுகிறார்கள். நம் மீது விமர்சனம் வைப்பவர்களை நாம் ஒரு போதும் திருப்திப்படுத்த இயலாது. நாம் தடுப்பு மருந்தினை நிச்சயம் கண்டறிவோம் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். 

.