அதிகரிக்கும் கொரோனா: மருத்துவமனை படுக்கை வசதிகளை அறிந்து கொள்ள செயலி!!

டெல்லியின் எல்லைகளைத் திறக்கும் அடுத்த கணம், நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் மருத்துவம் பார்த்துக் கொள்ள இங்கு குவிந்துவிடுவார்கள்.

அதிகரிக்கும் கொரோனா: மருத்துவமனை படுக்கை வசதிகளை அறிந்து கொள்ள செயலி!!

அதிகரிக்கும் கொரோனா: மருத்துவமனை படுக்கை வசதிகளை அறிந்து கொள்ள செயலி!!

New Delhi:

கொரோனா நோயாளிகள் மருத்துவமனை படுக்கை எண்ணிக்கை மற்றும் வெண்டிலேட்டர் இருப்பு குறித்து அறிந்து கொள்ள டெல்லி அரசு செயலி வெளியிடும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் நிலையில், செயலி வெளியிடு குறித்து கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில், கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 20.000ஐ நெருங்கியுள்ளது. கடந்த 24மணி நேரத்தில் மட்டும் 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக ஆன்லைனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது, கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் யாரும் கவலை அதிகரிக்கிறது. எனினும், டெல்லி வாசிகள் யாரும் பீதியடைய வேண்டாம். நமது அரசு கொரோனா வைரஸை விட நான்கு படிகள் முன்னால்" இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். 

மூன்று, நான்கு நாட்களுக்கு முன்பு ஜூன்.5ம் தேதிக்குள் 9,500 படுக்கைகள் தயார்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தேன். தற்போது 2,300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள நாளை செயலி வெளியிடப்படும். 

இந்த வார இறுதிக்குள் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான 2,300 படுக்கை வசதிகள், 9,500 படுக்கை வசதிகளாக அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

எல்லைகளை மூடும் முடிவு குறித்து கெஜ்ரிவால், “டெல்லியின் எல்லைகளைத் திறக்கும் அடுத்த கணம், நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் மருத்துவம் பார்த்துக் கொள்ள இங்கு குவிந்துவிடுவார்கள். டெல்லி மருத்துவமனைகள், டெல்லிவாசிகளுக்கு சிகிச்சையளிப்பதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்,” என்று பேசியுள்ளார்.

இதனிடையே, எல்லைகளை மூடும் முடிவு குறித்து கெஜ்ரிவால் கூறும்போது, “டெல்லியின் எல்லைகளைத் திறக்கும் அடுத்த கணம், நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் மருத்துவம் பார்த்துக் கொள்ள இங்கு குவிந்துவிடுவார்கள். டெல்லி மருத்துவமனைகள், டெல்லிவாசிகளுக்கு சிகிச்சையளிப்பதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்,” என்று பேசியுள்ளார்.

அதேபோல், “உங்கள் குடும்பத்தில் யாருக்காவது நோய்த் தொற்று இருக்கிறது என்றால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவமனைப் படுக்கை இருக்கும் என்பதை முதல்வராக உறுதி கூறுகிறேன்,” என்றார். இன்று முதல் மாநிலங்களுக்கு இடையில் அத்தியாவசியமற்ற போக்குவரத்துக்கு அனுமதி கொடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.