This Article is From Mar 07, 2020

“கொரோனாவைத் தடுப்பது எப்படி?”- வீடியோவுடன் விளக்கி பாராட்டைப் பெற்ற அதிமுக!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 31-வது நபர் தாய்லாந்து, மலேசியா நாடுகளுக்குச் சென்று வந்திருப்பது தெரியவந்துள்ளது.

“கொரோனாவைத் தடுப்பது எப்படி?”- வீடியோவுடன் விளக்கி பாராட்டைப் பெற்ற அதிமுக!!

Coronavirus: தற்போது அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருக்கிறது என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது
  • தமிழகத்தில் இன்னும் யாருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்படவில்லை
  • கொரோனா குறித்து பீதியடைய வேண்டாம்: தமிழக அரசு

கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து தமிழக ஆளுங்கட்சியான அதிமுக, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் விளக்கியுள்ளது. அந்த வீடியோ எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதனால் பலரும் அதைப் பாராட்டி வருகிறார்கள். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் எப்படி இருக்கிறது என்பது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை; கொரோனா பாதிப்பைத் தடுக்க மக்கள் நன்றாக கை கழுவ வேண்டும்; பீதியடைய வேண்டாம்” என்று அறிவுரை வழங்கினார். 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 31-வது நபர் தாய்லாந்து, மலேசியா நாடுகளுக்குச் சென்று வந்திருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருக்கிறது என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், “கொரோனா வைரஸ் காரணமாக நம் முன்னால் புதிய சவால்கள் இருக்கின்றன… ஆக்ராவில் ஒரு தனி சிகிச்சைப் பிரிவை உருவாக்கியுள்ளோம். இந்தியாவில் யாத்திரை மேற்கொண்டுள்ளவர்கள் பற்றியும் ஈரானில் இருக்கும் மாணவர்கள் பற்றியும் நாங்கள் அதிக கவலை கொள்கிறோம். ஈரான் அரசுடன் இது குறித்துத் தொடர்ந்து பேசி வருகிறோம்” என்றார். 

.